தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘’நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வருகிற 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி வரை தலைமைக்கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.
விண்ணப்ப கட்டணம் ரூ.5,000-ம், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.2,500-ம் ஆகும். வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக்கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித்தரப்படும்.
விண்ணப்பப்படிவம் தி.மு.க. தலைமைக்கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment