கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

நலிந்தோருக்கு உதவித் தொகை ரூ. 3.2 லட்சம் வழங்கினார் முதல்வர் கலைஞர்


தி.மு.க. தலைமைக் கழகம் 10.02.2011 அன்று வெளி யிட்ட அறிக்கை:

கலைஞர் கருணா நிதி அறக் கட்டளைக் காக முதல்வர் கலைஞர், தனது சொந்தப் பொறுப் பில் அளித்த அய்ந்து கோடி ரூபாயை வங்கி யில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை எளிய நலிந் தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம் பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாகப் போடப்பட்ட அய்ந்து கோடி ரூபாயில் தென் னிந்திய புத்தக விற்ப னையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மீதியுள்ள 4 கோடி ரூபாயில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படு கிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 1 கோடியே 88 லட் சத்து 65 ஆயிரம். மேலும், 2011 ஜனவரி மாத வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக 32 பேருக்கு மொத்தம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் 10.2.11 அன்று முதல்வர் கலைஞர் வழங்கினார்.

No comments:

Post a Comment