கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

கணினி குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த திட்டம் தேவை - முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி வலியுறுத்தல்


கணினி தொடர்பான குற்றங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இத்தகையை பிரச்னைகளில் இருந்து மக்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த கொள்கை திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று டெல்லி யில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் விவாதிப்பதற்கான கூட்டம் 01.02.2011 அன்று டெல்லியில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010ம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. டிசம்பர், 2007 முதல் நாம் 5வது முறையாகக் கூடுகிறோம். இது உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காட்டும் அக்கறையைத் தெளிவுபடுத்துகிறது. நாட்டின் பல பகுதிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படும் வகையில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்கியுள்ள பின்னணியிலும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத அடிப்படைவாதக் குழுக் கள் ஈடுபட்டுள்ள நிலையி லும் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது மிகவும் அவசியம்.
தமிழத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து, அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது. மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம்&ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள் ளது. அது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அவ்வமைப்புகளின் உறுப்பினர்களை யும் கைது செய்துள்ளது.
மத்திய அரசின் ஆதர வோடு கடலோரப் பாதுகாப்பைத் தமிழகம் பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையும், கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து ஒத்திகைப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. 2006ல் எங்கள் அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடலோரச் சுற்றுக் காவலுக்கென 24 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது கடலோரச் சுற்றுக் காவலில் ஈடுபடுத்தப்படும் இப்படகுகள் பெருங்குறைபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். மத்திய அரசு இதன்மீது உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அவலத்தையும் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அண்மையில், 12.01.2011 அன்று, தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 22.01.2011 அன்றும் மேலும் ஒரு மீனவரும் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். இந்திய மீனவர்கள் மீது இனித் துப்பாக்கிச்சூடு உட்பட எந்தவிதத்திலும் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று டில்லியில், 26.10.2008 அன்று வெளியிடப்பட்ட இந்திய&இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும். சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் மீனவர்கள் வழி தவறி அண்டை நாட்டின் எல்லைக்குள் நுழைய நேர்ந்தால் மேலை நாடுகளோ அல்லது கீழை நாடுகளோ அவர்களைக் கைது செய்வதை தவிர உடல் அளவில் அவர்களுக்கு எந்தவிதத்திலும் தீங்கிழைப்பதில்லை. ஆனால் இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்றால், இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தாக்குவதுடன், அவர்களைக் கொல்லும் கொடுமைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தால் நமது நாடு அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் போல இலங்கை அரசும் எல்லை யைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மேல் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.
இருப்பினும், எங்களது வேண்டுகோளை உடனடியாக ஏற்று, நமது வெளியுறவுத்துறை செயலாளரை இது தொடர்பாக பேச அனுப்பியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கெனத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்:
2006ம் ஆண்டில் இவ்வரசு பதவியேற்றது முதல் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், காவல்துறையில் சுமார் 24 ஆயிரம் காவலர்களும், 2 ஆயிரம் உதவி ஆய்வாளர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக இரண்டு காவல் மாவட்டங்கள், ஒரு காவல் ஆணையரகம், 19 காவல் நிலையங்கள், 11 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், 47 புறக்காவல் நிலையங்களையும் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தியுள்ளோம்.
2010&11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு காவல்துறைக்கென ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். மேலும், 2006ம் ஆண்டில் 3வது மாநில காவல் ஆணையம் அமைத்து, காவல் பணிகளைச் செவ்வனே செய்திடவும், காவல்துறையினர் நலனைப் பேணவும் அவ்வாணையம் அளித்த பெரும்பாலான பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளோம்.
2010ம் ஆண்டில் மட்டும் 430 காவலர்களுக்குப் பயங்கரவாதத் தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்து முக்கிய அமைப்புகள் மற்றும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கான விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களையும் திறமையுடன் எதிர்கொள்ளும் வகையில், 300 கமாண்டோ படைவீரர்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகிறோம்.
புதிதாக 600 பதவிகளை ஏற்படுத்தி, நுண்ணறிவுப் பிரிவை வலுப்படுத்தியுள் ளோம். திட்டமிட்ட குற்றம்சார் நுண்ணறிவுப் பிரிவு 500 காவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்க, தமிழகக் காவல்துறை தொடர்புடைய மத்திய அரசின் அமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து செயல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Òசிசிடிஎன்எஸ்Ó எனப்படும் மத்திய அரசு நிதியின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றம் மற்றும் குற்றவாளி பின்னணி வலைதள முறைத் திட்டத்திற்கு ரூ.266 கோடி நிதியுதவி கோரி, கருத்துரு ஒன்றை மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ளது. அக்கருத்துருவிற்கு ஏற்பளித்து, தேவையான நிதி யினை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இத்திட்டதின் கீழ், சுமார் 18 ஆயிரம் காவலர்களுக்குக் கணினி அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
காவல் சீரமைப்பை பொறுத்தவரையில், சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு எனத் தனித்தனியாகக் காவல் நிலைய அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. காவல் பணியாளர் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. காவல் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, அது சட்டப்பேரவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.
மூன்றாவது மாநில காவல் ஆணையப் பரிந்துரைகளின் அடிப்படையில், காவல் நிலையங்களின் பணித்தன்மையைக் கருத்திற்கொண்டு, Òசிறிய நிலை யம்Ó, Òநடுத்தர நிலையம்Ó, Òபெரிய நிலையம்Ó எனக் காவல் நிலையங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப இக்காவல் நிலையங்களிலும், பெருநகரக் காவல் நிலையங்களிலும் ஒப்பளிக்கப்பட்ட காவலர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு, அதிகரிக்கப்பட்ட பணியாளர்கள் எண் ணிக்கை காரணமாக தற்போதுள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் காவலர்கள் எண்ணிக்கையுடன், கூடுதலாக மேலும் 30 ஆயிரம் காவலர்கள் பணிபுரியும் வாய்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரவிருக்கின்ற மத்திய நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தி ஒதுக் கீடு செய்திட வேண்டும். பெருநகர காவல் திட்டத்தைச் செயல்படுத்திட தனியாக மத்திய அரசு நிதியுதவியில் திட்டம் ஒன்றை உருவாக்கி, வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதனை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள நமது எல்லைகள் பாதுகாக்கப்படுவது போல் தென் பகுதியில் உள்ள கடல் எல்லையைப் பாதுகாப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு கடல் வழியில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் பற்றி ஏற்கனவே நாம் அறிவோம். எனவே, அதிக படகுகள், காவல் நிலையங்கள் மற்றும் வான்வழிக் கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக எங்களது கோரிக்ககளைச் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும்.
கணினிசார் குற்றங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், மக்கள் வாழ்க்கையிலும் பல அச்சுறுத்தல்கள் நேரும் வாய்ப்புகள் உள்ளதால், அவற்றின் மீதும் அரசுகள் அதே அளவில் கவனம் செலுத்த வேண்டும். சமூக விரோதிகள் இழைக்கும் கணினிசார் குற்றங்களால் பொதுமக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி, அவர்களுக்குப் பண இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு, மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கொள்கைத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்பைச் செம்மையாகப் பராமரிக்கவும், நிலைமைகளைத் தொடர்ந்து சீரிய முறையில் கண்காணிக்கவும் தமிழக அரசு எப்போதும் செயலாற்றும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் உறுதியளிக்கிறேன். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என்றும், மத நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்றும் தமிழக அரசின் சார்பில் உறுதியளிக்கிறேன்.

இவ் வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment