கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

பூரண ஓய்வில் இருப்பவர் எப்படி முதல்வராக முடியும்? - நிதி அமைச்சர் அன்பழகன் கேள்வி


பூரண ஓய்வில் இருப்பவர் எப்படி முதல்வர் ஆக முடியும் என்று நிதி அமைச்சர் அன்பழகன் கேள்வி எழுப்பினர். இதை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் 10.02.2011 அன்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதியமைச்சர் அன்பழகன் பதில் அளித்து பேசியதாவது:
எதிர்க்கட்சி துணைத் தலைவர், ‘அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம், நீங்கள் எதிர்க்கட்சியாக இருப்பீர்கள்’ என்கிறார். அவர் ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர் எப்படி முதல்வராக வர முடியும். ஓய்வில் இருப்பவரை எப்படி முதல்வராக்குவீர்கள்? (அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்) ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் பூரண ஓய்வு வேண்டும் என்று சட்டப்பேரவையில் நீங்கள்தான் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். அதுவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஓய்வில் இருப்பவரை எப்படி முதல்வராக்குவீர்கள் என்றுதான் சொன்னேன். அதில் உங்களுக்கு என்ன கடுப்பு? தீர்மானத்தில் பூரண ஓய்வு என்ற வாசகம் இல்லை என்றால் நான் பேசியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்:
உழைத்தவர்கள் ஓய்வில் இருப்பார்கள். அதில் என்ன தவறு. நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் அப்படிதான் இருக்கிறது. இவ்வாறு கூறி, இரண்டு நாட்களுக்கு முன் அதிமுகவினர் கொண்டு வந்த தீர்மானத்தை படித்தார். நீங்கள் கொடுத்த தீர்மானம் உண்மையா, இல்லையா? அதைத்தான் நிதி அமைச்சர் சொல்கிறார்.
அமைச்சர் துரைமுருகன்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசும்போது எங்கள் ஆட்சியை பற்றி குறை கூறினார். அப்போது நாங்கள் அமைதியாக இருந்தோம். ஓய்வு என்பது தவறான வார்த்தை அல்ல. அது பாராளுமன்ற மரபுக்கு உட்பட்டதுதான். இதை நீக்க வேண்டியதில்லை.
அமைச்சர் அன்பழகன்:
என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத்தில்கூட தான் (ஜெயலலிதா) ஆஜராக முடியாததற்கு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பூரண ஓய்வு என்ற தீர்மானத்தைதான் காட்டியுள்ளார்.
(தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் போட்டனர். அமைச்சர் அன்பழகன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.)
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:
வேண்டும் என்றே திட்டமிட்டு சபையை நடத்த விடாமல் அதிமுகவினர் சதி செய்கிறார்கள். எனவே அவர்களை வெளியேற்ற வேண்டும்.
பேரவைத் தலைவர்:
இன்று பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். அதிமுகவினர் அனைவரும் அமைதியாக இருக்கையில் உட்காருங்கள்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக):
ஜெயலலிதா இந்த கூட்டத்தொடருக்கு வர முடியாது என்பதால்தான் தீர்மானம் கொண்டு வந்தோம். இது தற்காலிக ஏற்பாடுதான். அதை அரசியலாக்குகிறீர்கள். நிதி அமைச்சர் கூறிய வார்த்தையை (பூரண ஓய்வு) அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்:
யாரையும் குறைவுபடுத்த வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை. (இந்த நேரத்தில் அதிமுகவினர் சிலர் நிதி அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.)
பேரவை தலைவர்:
அதிமுகவினர் மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: ஓய்வில் இருக்கும் ஒருவர் முதல்வராக வர நீங்கள் ஆசைப்படும்போது, தற்போது முதல்வராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒருவரால் அந்த பதவியை தக்க வைத்து கொள்ள முடியாதா?
ஓ.பன்னீர்செல்வம்:
இன்றைய முதல்வர் அப்போது இந்த அவைக்கே வராமல் மீண்டும் முதல்வராக வந்தபோது, ஜெயலலிதாவால் ஏன் வர முடியாது?
அமைச்சர் அன்பழகன்:
உங்கள் நோக்கத்திற்கு தகுந்தாற்போல் நான் சொல்வதை எடுத்துக்கொண்டால் அதைப்பற்றி ஒன்றும் இல்லை.
செங்கோட்டையன் (அதிமுக):
நீங்கள் எதிர்காலத்தில் முழுமையாக ஓய்வுபெறப் போகிறீர்கள்.
பேரவைத் தலைவர்:
அதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
செங்கோட்டையன்:
நாங்கள் வலியுறுத்தியும் மறுக்கிறீர்கள். நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள் சிலர் பட்ஜெட் புத்தகத்தை கிழித்து அவையில் வீசினர்.

No comments:

Post a Comment