முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 10.02.2011 அன்று காலை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது.
இதையடுத்து வெளியே வந்த தங்கபாலு, நிருபர்களிடம் கூறியதாவது:
தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார். இதன் பின்னர் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினேன். வரும் 13&ம் தேதி எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் சத்தியமூர்த்தி பவனில் கலந்தாலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பது குறித்து கேட்டபோது, “சோனியா எடுக்கும் முடிவை வரவேற்று செயல்படுத்துவதுதான் காங்கிரஸ்காரர்களின் கடமை. இங்கு தனி மனித விருப்பத்துக்கு இடமில்லை. காங்கிரசால்தான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பெருமை. எந்த தனி மனிதனாலும் காங்கிரசுக்கு பெருமை கிடையாது” என்றார் தங்கபாலு.
No comments:
Post a Comment