தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 679 பரம்பரை சித்த வைத்தியர்கள், 2 ஆயிரத்து 745 ஆயுர்வேத பரம்பரை வைத்தியர்கள் மற்றும் 826 யுனானி பரம்பரை வைத்தியர்கள் மருத்துவ மன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது, பரம்பரை சித்த மருத்துவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியரின் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சித்த மருத்துவர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் அரசு ஆதரவு பெறும் வகையில், அமைப்பு சாராத் தொழிலாளர் என்ற நிலையில நல வாரியம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.
தமிழகத்தில் பல்வேறு அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு பல நல வாரியங்களை அமைத்து பல்வேறு உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நல வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு உதவித் தொகைக்கும் மற்றும் நல வாரியத்தின் நிர்வாக செலவினத்திற்கும் உத்தேசமாக ஆண்டு ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் செலவாகும்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment