கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படும் - முதல்வரிடம் பிரதமர் உறுதி




இலங்கை கடற்படை யினரால் தமிழக மீன வர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக டில்லி யில் முதலமைச்சர் கலை ஞரிடம் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.

முதல்வர் கலைஞர் 31.01.2011 அன்று மதியம் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு, தமிழக மீனவர் பிரச் சினை, மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல் வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்தனர்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சீர மைப்புப் பணிகள் மேற் கொள்ளவும், நிவாரண உதவி வழங்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதி யில் இருந்து ரூ.1,832 கோடி ஒதுக்கீடு செய்யு மாறு பிரதமர் மன்மோ கன்சிங்கிடம் முதலமைச் சர் கலைஞர் கோரிக்கை வைத்தார். அதற்கு பிரத மர், இதுவிஷயமாக மத் திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரம் தலைமை யிலான உயர்நிலைக்குழு விரைவில் முடிவு எடுக் கும் என்று உறுதி அளித் தார்.

கடந்த வாரம் தமிழக மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படை யால் கொடூரமாகக் கொல் லப்பட்ட சம்பவத்தை பிரதமரிடம் எடுத்து ரைத்த முதலமைச்சர் கலைஞர், தமிழக மீன வர்கள் மீதான தாக்குதல் இனியும் தொடராமல் இருக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண் டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் பதில்

அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்கு தல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் நேரில் கண்டிப்புடன் தெரிவிப்பதற்காக உயர் நிலைக்குழுவை உடனடி யாக இலங்கைக்கு அனுப் புமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தர விட்டிருப்பதாகக் கூறி னார்.

அதன்படி, வெளி யுறவுத்துறை செயலா ளர் நிருபமா ராவ் தலை மையில் ஒரு குழு தற் போது இலங்கை சென் றிருப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரி வித்தார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்ப வங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வகை யில் இந்தியா-இலங்கை கடலோர எல்லையில் இந்திய கடற்படையை யும், கடலோர காவல் படையையும் நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பிர தமர், இதுவிஷயமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந் தோணியிடம் பேசுவ தாக உறுதி அளித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பிரதமரிடம் பேசிய முதலமைச்சர் கலைஞர், மெட்ரோ ரயில் திட் டத்தை திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத் திற்கு மத்திய அரசு அனு மதி அளிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் திட் டத்திற்கான மத்திய அரசின் நிதி உதவியை விரைவாக வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பிரதமர் மன் மோகன்சிங், மெட்ரோ ரயில் திட்டத்தை திரு வொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு நிதியை உடனடியாக வழங்க விரைவாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

முல்லை பெரியாறில் கேரள அரசு கட்ட உத் தேசித்துள்ள புதிய அணை தொடர்பான சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஆராய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச் சகம் ஒரு தொழில்நுட் பக்குழுவை அமைத்தி ருப்பது பற்றிய செய்தி களைச் சுட்டிக்காட்டி பிரதமரிடம் முதலமைச் சர் கலைஞர் தனது கவ லையைத் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங்,

``புதிய அணை கட் டும் விவகாரம் தொடர் பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தொழில் நுட்பக்குழு நியமனம் தேவையில்லாதது. இருப்பினும், இந்தப் பிரச் சினையை கவனத்தில் கொள்வேன்'' என்று உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment