கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, February 6, 2011

அமைச்சர் தமிழரசியின் தம்பி திருமணம் - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தி வைத்தார்


அமைச்சர் தமிழரசியின் தம்பி திருமணத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 06.02.2011 அன்று நடத்தி வைத்தார்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் தம்பி ரமேஷ்பாபுவுக்கும் & ராஜேஸ்வரிக்கும் மதுரையில் 06.02.2011 அன்று காலை திருமணம் நடைபெற்றது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியும், இவரது மனைவி காந்தி அழகிரியும் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் அழகிரி பேசியதாவது:

திமுகவினர் இல்ல திருமணங்களை கழக குடும்ப மணவிழா என்று பெருமையுடன் குறிப்பிடுவார்கள். நான் அதையும் தாண்டி உறவினர் வீட்டுத் திருமண விழாவாக, இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
திருமங்கலம், திருச்செந்தூர், கம்பம், ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி இடைத் தேர்தல்களிலும் மதுரை மத்தி, மேற்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் நான் தேர்தல் பொறுப்பாளராக இருந்துள்ளேன். அந்த இடைத்தேர்தல்களில் என்னோடு தேர்தல் பணியாற்றி வெற்றி தேடித் தந்தவர்கள் இங்கு நிரம்ப இருக்கிறீர்கள். அதில் தமிழரசிக்கும் பெரும் பங்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாமி, பரிதி இளம்வழுதி, பூங்கோதை, தங்கம் தென்னரசு, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், கலெக்டர் காமராஜ், மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, தளபதி, மூக்கையா (தேனி), திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாவட்ட ஊராட்சித் தலைவர் அசோக்குமார், எம்எல்ஏக்கள் கவுஸ்பாட்ஷா, ராஜேந்திரன், கோவை தங்கம், முருகவேல், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment