கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, February 6, 2011

சிங்கார சென்னை - முதலமைச்சர் கலைஞர் பெருமிதம்






மேம் பாலங்கள், பூங்காக்கள் என்று தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மாறி வருகிறது என்று முதல் அமைச்சர் கலை ஞர் கூறினார்.

சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்சில், ரூ.8 கோடியே 41 லட்சம் செலவில் கூடுதல் மேம் பாலம் ஒன்று கட்டப் பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் திறப்பு விழா 05.02.2011 அன்று மாலை நடைபெற்றது. விழா வுக்கு மேயர் மா.சுப்பிர மணியன் தலைமை தாங் கினார். சிறப்பு விருந்தின ராக முதல் அமைச்சர் கலைஞர் கலந்துகொண்டு மேம்பாலத்தினை திறந்துவைத்தார். விழா வில், துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீரா சாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன், தலைமை நிரு வாக அதிகாரி ராம நாதன், டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி., வி.எஸ். பாபு எம்.எல்.ஏ., மாநக ராட்சி ஆணையர் கார்த் திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே விழாவில், சென்னை மாநகராட்சி யால் பெரம்பூர் முர சொலிமாறன் பூங்கா வில் அமைக்கப்பட்டு உள்ள இசை நடன நீருற்று, சின்னாண்டி மடம் மற்றும் எண்ணுர் நெடுஞ்சாலையில் கட் டப்பட்டுள்ள பெட்டக வடிவப் பாலங்கள், அடையாறில் கைப் பிடிச்சுவர்கள் பலப் படுத்தப்பட்டு புதுப் பிக்கப்பட்ட திரு.வி.க. பாலம், இந்திராகாந்தி நகரில் புதிய இணைப்பு பாலப்பணிகள் என ரூ.14 கோடியே 36 லட்சம் செலவில் அமைக்கப் பட்டுள்ள 53 வளர்ச்சிப் பணிகளை முதல் அமைச் சர் கலைஞர் திறந்து வைத்தார்.

விழாவில், முதல் அமைச்சர் கலை ஞர் பேசியதாவது:

இங்கே பேசிய ஸ்டாலின், தயாநிதி மாறன், மேயர் ஆகியோர் பாலங்களின் வரலாற்றை கூறினார்கள். மேம்பாலங்கள் சென்னைக்கு தேவை என்பதை இன்று, நேற் றல்ல 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அனு பவத்தால் உணர்ந்தவன். நான் சென்னைக்கு குடும் பத்துடன் குடிவந்து கோடம்பாக்கம் அருகே சக்கிரியா காலனி என்ற இடத்தில் வாழ்ந்தேன். அப்போது, எங்கள் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் வருவார். அவரது காரில் ஏறி ஸ்டூடியோ, பட நிறுவனங்களுக்கு காரில் செல்வது வழக் கம். அப்போது, ஸ்டா லின் குழந்தை. ஒருநாள் நான் கலைவாணருடன் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் உள்ள வர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தனர். குழந்தை ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட் டான். அந்த ஊக்கு வேறு திறந்த நிலையில் வயிற் றுக்குள் சென்றுள்ளது.

உடனடியாக, கலை வாணர் காரிலேயே ஸ்டாலினை தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தோம். ஆனால், கோடம்பாக் கம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது, ரயில்வே கேட்டை மூடினார்கள் என்றால், திறப் பதற்கு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதனால், என்ன செய்வது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வலி பொறுக்காமல் ஸ்டாலின் அழுதுவிட்டான். அந்த இடத்தில் ஒரு பாலம் இல்லாத காரணத்தினால் கேட் இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எத்தனை மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தேன்.

அப்போது, மாநகராட்சியில் சிறிய பொறுப்பில் கூட தி.மு.க. இல்லை. என்னிடம் அதிகாரம் இல்லை, செல்வாக்கு இல்லை. ஆனால், ஆர்வம் மட்டும் இருந்தது. 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அண்ணா மறைவுக்கு பின், நான் முதல் அமைச்சராக ஆனதும், தமிழகத்தில் மேம்பாலங் கள் கட்ட முடிவு செய்தேன். முதல் காரியமாக சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தியாவில் முதல் பெரிய மேம்பாலம் அதுதான். அதன் பிறகு, சென்னையில் போக்குவரத்து வசதிக்கு நான் செய்த வசதிகளை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பட்டியலிட்டு கூறிவிட்டார். ஆனால், மேம்பாலம் கட்டிய எங்களுக்கு அ.தி.மு.க. அரசால் கிடைத்தது ஜெயில்தான். ஊழல் என்று கூறிக்கொண்டு பாலத்தை எல்லாம் தோண்டி பார்த்தார்கள். காலம் எந்த உண்மையையும் விழுங்கிவிடாது. என்றைக்கும் உண்மை வெளியே வந்தே தீரும். நான் முதலாவதாக போட்டியிட்ட தொகுதி குளித்தலை. குளித்தலைக்கு அருகே உள்ள பெரிய ஊர் முசிறி. இந்த இரண்டு ஊருக்கும் இடையே கொள்ளிடம் ஆறு ஓடியது. அதனால், இரு ஊருக்கும் இடையே படகில் செல்பவர்கள், அடிக்கடி விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டது. குளித்தலையில் இருந்து முசிறிக்கு திருச்சி வழியாக சுற்றிச் செல்ல வேண்டும் என்றால் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. நான் குளித்தலையில் போட்டியிட்டபோது, நான் வெற்றி பெற்றால் பாலம் கட்டித் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், ஜெயித்து எம்.எல்.ஏ.வாக ஆன பிறகும் சில காரணங்களால் பாலம் கட்ட முடியவில்லை. காலம் மாறும் என்று காத்திருந்தேன். அதன்படி, முதல் அமைச்சராக நான் பொறுப்பேற்றதும், முதலில் வாக்குறுதி கொடுத்த கொள்ளிடம் பாலத்தை நான் கட்டினேன். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று நாங்கள் சொல்வதற்கு இதுவே அடையாளம். சென்னையில் இன்று எத்தனையோ மேம்பாலங்கள், செம் மொழிப் பூங்கா, தொல்காப்பியர் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சென்னை மாநகரம் சிங்காரச் சென்னையாக மாறி வருகிறது. ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் வாழும் அளவுக்கு வசதி வாய்ந்த நகரமாக சென்னை நகரை மாற்றிக் காட்டுவோம்.

இவ்வாறு கலைஞர் பேசினார்.

அதிமுக ஆட்சியில் 871 பாலம் திமுக ஆட்சியில் 1187 பாலம் - துணை முதல்வர் பேச்சு :

விழாவில், துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பாலம் என்றாலே நினைவுக்கு வருபவர் முதல் அமைச்சர் கலைஞர்தான். சென்னையில் முதலாவ தாக கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்தை உருவாக்கியவர் அவர். அதன் பிறகு, 1996ஆம் ஆண்டு நான் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற உடன், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 10 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. பெரம்பூர் பாலம் கட்டுவதில் மட்டும் சில இடையூறுகள் ஏற்பட்டன. மீதமுள்ள 9 மேம்பாலங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த மேம்பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது 94 கோடி ரூபாய். ஆனால், செலவு செய்யப்பட்ட தொகை 64 கோடியே 46 லட்சம் ரூபாய். 30 கோடியே 10 லட்சம் ரூபாய் மிச்சம் செய்யப்பட்டது. தமிழகத்தில் முதல் அமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் நிறைய பாலங்கள் கட்டப்பட்டன. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 497 கோடி ரூபாய் செலவில் 871 மேம்பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 1257 கோடி செலவில் 1187 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்படி திட்டங்கள் தீட்டுவது மட்டுமல்ல. அதை முறையாக தீட்டி நிறைவேற்றவும் செய்து வருகிறோம். சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதே எங்கள் லட்சியம் என்றோம். ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளோம். முதல் அமைச்சர் கலைஞரின் கனவான கூவம் நதியை சுத்தப்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதையும் மீண்டும் முதல் அமைச்சராக கலைஞரே திறந்து வைப்பார். விரைவில் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மாறும்.

இவ்வாறு துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத மக்கள் நல திட்டங்கள் - தயாநிதி மாறன் பாராட்டு :

விழாவுக்கு முன்னிலை வகித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
இந்த மேம்பாலம் கட்டும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. மேம்பாலம் பணி எப்போது முடியும் என்று எல்லோரும் ஆர்வமாக இருந்தனர். இந்த பாலத்திற்காக என் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த தொகுதி மேம்பாட்டு நிதியையும், எனது தொகுதி மேம்பாட்டு நிதியையும் வைத்து பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பாலம் பணிகள் நடந்தது. இந்த பாலம் கட்ட ரயில்வே போர்டின் அனுமதி பெற்றோம். நான் ரூ.9.25 கோடி கொடுத்தேன். ரூ.8.41 கோடி பாலத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மீதி நிதியை இந்த பகுதியை மேம்படுத்த மேயர் எடுத்துக் கொண்டார்.
திமுக ஆட்சியில்தான் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு யாரும் பாலம் கட்டவில்லை. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து 10 மேம்பாலங்களை கட்டினார். அதில் ஒரு பாலத்தை கட்ட முடியவில்லை. அதை வைத்து முதல்வரையும், துணை முதல்வரையும் சிறைக்கு அனுப்பினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஒரு புதிய பாலம் கூட கட்டவில்லை. ஏற்கனவே கட்டிய பாலத்தை உடைத்தார். திமுக அரசு பாலம் கட்டும். ஜெயலலிதா மீண்டும் வந்தால் பாலத்தை உடைப்பார். ஷ்இன்னும் பல பணிகள் பாக்கி இருக்கின்றன. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து அதை நிறைவேற்றுவதுடன், இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment