கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

கலைஞர் - சோனியா முக்கிய சந்திப்பு


உள் நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர் மாநாட் டில் கலந்து கொள்வதற் காக முதல்-அமைச்சர் கலைஞர் 30.01.2011 அன்று டில்லி சென் றார். டில்லியில் 31.01.2011 அன்று மதியம் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந் தித்து பேசினார். அப் போது தமிழக மீனவர் கள் மீது இலங்கை கப்பற்படை நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவது உள் பட பல்வேறு அம்சங் கள் பற்றி பிரதமருடன் அவர் விவாதித்தார். 31.01.2011 அன்று மாலையில் அவர் காங்கிரஸ், மற்றும் அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து தமிழக சட்ட சபை தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங் கீடு பற்றியும் ஆலோ சனை நடத்தினார். இந்த சந்திப்பு சோனியாகாந்தி யின் வீட்டில் இரவு ஏழு மணிக்கு நடந்தது. இந்த ஆலோசனை யின் போது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, அகமது படேல் ஆகி யோரும் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி ஆகி யோரும் கலந்து கொண் டனர். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க-காங் கிரஸ் இடையே தொகுதி பங்கீடு செய்வது தொடர் பாக விவாதிக்கப்பட் டது. சுமார் 45 நிமிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்தச் சந்திப்புக்குப் பின் முதலமைச்சர் கலைஞர் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:-சோனியா காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர் கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், அதன் விவரம் கூற முடியுமா? பதில்:-சோனியா காந்தியுடன் முக்கால் மணி நேரம் விவாதித் தோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடரு கிறது. தொகுதிகளைப் பற்றிய விவரங்கள், எண் ணிக்கை பற்றி விவா திக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவினை அமைக் கிறார்கள். அந்தக் குழு வில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பார் கள். அதன் பிறகு எங்க ளுடைய கூட்டணிப் பணிகள் தொடரும். கேள்வி:-அந்தக் குழு வின் கூட்டம் எப்போது நடைபெறும்? பதில்:-குழு அமைத்த பிறகு. கேள்வி:-பேச்சு வார்த்தை எப்படி இருந் தது? பதில்:-திருப்திகர மாக அமைந்தது. இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் கூறி னார். டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் முதல மைச்சர் கலைஞரை, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

No comments:

Post a Comment