கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 21, 2011

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் - பிரதமர் மன்மோகன்சிங்


தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் 16.02.2011 அன்று டில்லியில் தொலைக் காட்சி ஆசிரியர்களுக்கு தனது வீட்டில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது, ``தமிழ்நாட்டில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?'' என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்று சொல்ல நான் ஜோதிடர் அல்ல. ஆனால், இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நான் இப்போதுதான் கேரளாவில் இருந்து திரும்பியிருக்கிறேன். அங்கும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும். அதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப காற்றும் திசை மாறி (இடதுசாரிகளுக்கு எதிராக) வீசுகிறது. இந்த மாற்றம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.

அசாமில் தொடர்ந்து 3ஆவது முறையாக (ஹாட்ரிக்) காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்று கேட்கிறீர்கள். நானும் அப்படித்தான் நம்புகிறேன். அங்குள்ள காங்கிரசார் அதை நிறைவேற்றுவார்கள் என்று நினைக்கிறேன். அசாம் அரசாங்கம் மிக நல்ல முறையில் செயலாற்றியுள்ளது.

அங்கு உல்பா தீவிரவாதிகளுடனான பேச்சு வார்த்தையும் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு சாதகமான சூழலை வலுப்படுத்தி உள்ளது.

மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. விலைவாசி உயர்வு பிரச்சினையால் எங்களுக்குள் எந்த பதற்றமோ, மோதலோ, கருத்து வேறுபாடோ எழவில்லை.

மற்ற கூட்டணிக் கட்சிகளைப்போல், எங்கள் கூட்டணியும் (மத்தியில்) கூட்டாட்சியை வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளது. ஆகவே எங்கள் கூட்டணி முறிவதற்கு எந்த ஒரு பிரச்சினையும் எழவில்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. எங்களது அரசாங்கமும் வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணிக் கட்சியினர் எங்களுடன்தான் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.

- இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment