கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

‘காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும் - சென்னை திரும்பிய மு.க.அழகிரி பேட்டி


காங்கிரசுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 08.03.2011 அன்று நள்ளிரவு சென்னை திரும்பினார். அப்போது, ‘தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரும்’ என்று கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 08.03.2011 அன்று மாலை இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கூட்ட முடிவில், ‘திமுக & காங்கிரஸ் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணி இணைந்து செயல்பட்டு வெற்றி பெறும். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ என்று குலாம்நபி ஆசாத் கூறினார். ‘எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெற்றிக்காக பாடுபடுவோம். கூட்டணி வெற்றி பெறும்’ என்று அழகிரி கூறினார்.
பின்னர் 08.03.2011 அன்று நள்ளிரவு 12.40 மணிக்கு மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டி:
காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிதானா?
ஆம். மிகுந்த மகிழ்ச்சி. பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும், திமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும்.
காங்கிரசுடனான தொகுதிகள் எப்படி தேர்வு செய்யப்படும்?
இது சம்பந்தமாக இரு கட்சிகளை சேர்ந்த ஐவர் குழுவினர் அமர்ந்து சுமுகமாக பேசி தொகுதிகளை தேர்வு செய்து காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment