கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 10, 2011

5 ஆண்டு திமுக ஆட்சியில் கல்வித் துறையில் சாதனை - முதல்வர் கலைஞர் பெருமிதம்


கல்வித் துறையில் திமுக அரசு செய்த சாதனைகளை முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 10.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு, சமச்சீர் கல்வி முறை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் நடைமுறைப் படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
2011&2012 கல்வியாண்டில் சமச்சீர்க் கல்விமுறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப்பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டு பாடநு£ல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் 2009 இயற்றப்பட்டு 7.12.2009 முதல் செயல்படுத்தப்பட்டது.
இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் 2006&2007ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் ஸீ487 கோடியே 35 லட்சம் செலவினத்தில் 21 லட்சத்து 28 ஆயிரத்து 938 மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.
2006&2007ம் ஆண்டு முதல் 2009&10ம் ஆண்டு முடிய மொத்தம் ஸீ20 கோடியே 11 லட்சத்து 70 ஆயிரம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 702 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக் கல்வி 1&ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் என 31.5.2006 அன்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 10 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 2008& 2009ம் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்து
ஸீ21 கோடியே 40 லட்சம் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 50 லட்சம் மாணவ மாணவியர் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் பள்ளியில் இருந்து நின்று விடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 16 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத மாணவியர்கள் பெயரில் தலா ஸீ3000 வீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இத்திட்டத்தின் கீழ் வைப்பீடு செய்யப்படும்.
2008&09ம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் ஸீ36.38 கோடி செலவில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 292 மாணவிகள், 2009&10ம் ஆண்டில் ஸீ32 கோடியே 75 லட்சம் செலவில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 170 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.
2006&07ம் ஆண்டு முதல் சத்துணவுடன் வாரம் 2 முட்டைகள், 2007&2008 முதல் வாரத்திற்கு 3 முட்டைகள், 2008&09ம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ணாத மாணவர்களுக்கு வாழைப் பழங்கள், 2009&2010ம் ஆண்டு முதல் வாரம் ஐந்து முட்டைகள் வீதம் வழங்கப்படுகின்றன.
இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயண திட்டமும், 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருவாய்ச் சான்று ஆகியன பள்ளியிலேயே வழங்கும் திட்டமும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
1960ம் ஆண்டு முதல் மாநிலத்தில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருது, 1997ம் ஆண்டு முதல் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என வழங்கப்பட்டு வருகிறது.
விருதுத் தொகை ஸீ1000 என்பது ஸீ2000 என 1997 முதலும், ஸீ2000 என்பது ஸீ5000 என 2007 முதலும் உயர்த்தப்பட்டு; விருதுபெறும் ஆசிரியர்களுக்கு விருதுத் தொகையுடன் வெள்ளிப்பதக்கமும், நற்சான்றித ழும் வழங்கப்படுகின்றன.
பொது நூலகத் துறையில் தொகுப் பூதியத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழுக் களில் பகுதி நேர நூலகர்களாகவும், ஊர்ப்புற நூலகர்களாகவும் ஸீ1500 மாதாந்திர தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1282 நூலகர்கள் முறையான ஊதிய விகிதத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக ஸீ3200&85&4900 என்ற சம்பள விகிதத்தில் 28.10.2006 முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு நிர்வாகக் காரணங்களால் தினக்கூலி பணியாளர்களைக் கொண்டு ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது 865 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு தற்காலத்திற்கேற்ற நவீன நூலக வசதிகள் வழங்கும் பொருட்டு கன்னிமாரா பொது நூலகம், 30 மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 100 நூலகங்கள் என 131 நூலகங்களில் கணிப்பொறி வசதி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் நலன் காத்திட அவர்களுக்கென தனி நல வாரியம் 10.8.2009 அன்று அமைக்கப்பட்டு 2646 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு 236 பேருக்கு ஸீ3 லட்சத்து 38 ஆயிரத்து 900 நலத்திட்ட உதவியாக வழங்கப் பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை, கோட்டூர்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு, 15.9.2010 அன்று திறக்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழும் இந்நூலகம்
ஸீ172 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும்
ஸீ60 கோடி செலவில் புத்தகங்கள், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக 195 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment