கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

மத்திய அமைச்சர் இராசா குற்றவாளியல்ல - முதலமைச்சர் கலைஞர் பேட்டி


மத்திய அமைச்சர் இராசாவைப் பொறுத்த வரை அவர் குற்றவாளி யல்ல என்றார் முதல மைச்சர் கலைஞர்.

முதலமைச்சர் கலை ஞர் 12.11.2010 அன்று சி.என்.என்., என்.டி. டி.வி., ஹெட்லைன்ஸ் ஆகிய தொலைக்காட்சி களுக்கு அளித்த பேட்டி வருமாறு :

கேள்வி : 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சி னையில் தி.மு.க.வின் நிலை என்ன?

முதல்வர் கலைஞர்: மத்திய அமைச்சர் இராசாவைப் பொறுத்த வரை, அவர் குற்றவாளி அல்ல. பிரமோத் மகா ஜன் அமைச்சராக இருந்த போதும்; அருண் ஷோரி அமைச்சராக இருந்த போதும், டெண்டர் விடப்படவில்லை; அவர்கள் எந்த முறை யைப் பின்பற்றினார் களோ - தொடர்ந்து அதே முறைதான் 2ஜி ஸ்பெக்ட்ரத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. முதலில் வந்தவருக்கு முதலில் என்ற முறை தொடர்ந்து பின்பற்றப் பட்டிருக்கிறது. யாருக் கும் தவறாக கொடுத்து விடவில்லை.

கேள்வி: தலைமை கணக்குத் தணிக்கை அதி காரியின் அறிக்கையில், மத்திய அமைச்சர் ராசா அவர்கள்மீது குற்றம் சாற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

முதல்வர் கலைஞர்: அந்த அறிக்கை முழுமை யாக வெளிவந்த பிறகு தான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியும். தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி யாரைப் பற்றியும் குறை சொல்லலாம்.ஆனால்,அதுவே இறுதியானதென்று எடுத்துக் கொள்ள முடி யாது. ஒருவரைப் பழி வாங்க வேண்டுமென் பதற்காக, யாரும் தற் குறியாக இருந்துவிடக் கூடாது.

கேள்வி: ஜெய லலிதா வலிய வந்து காங் கிரசுக்கு ஆதரவு கொடுத் திருக்கிறாரே?

முதல்வர் கலைஞர்: ஜெயலலிதாவுக்கு கதவு மூடப்பட்டு விட்டதாக - காங்கிரஸ் தரப்பில் பதில் சொல்லி விட் டார்களே!

No comments:

Post a Comment