கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 26, 2010

தமிழகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு ரூ.1,667 கோடி - தமிழக அரசு அறிவிப்பு


வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.1,667 கோடி செலவிடப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர் பாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலாவு தீன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள ஏழை எளியோரின் வறுமை நிலை யைக் களையவும், சமூக ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கவும், உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.717 கோடி திட்ட மதிப்பீட்டில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத் தை 2006 அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாடு அரசு செயல் படுத்தி வருகிறது. இத்திட்டம், தற்போது 16 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய 70 வட்டாரங்களைச் சார்ந்த 2509 ஊராட்சிகளில் 5.2 லட்சம் குடும்பங்களின் மேம் பாட்டுக்காக செயல்படுத்தப் பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்களை ஒருங்கிணைத்து, புதிய அமைப்புகளை உருவாக்கி அவற்றை வலுப்படுத்துவதுடன், ஏழை, எளியோரின் திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்திட திட்ட செயல்பாடுகளில் வெளிப் படையான நிருவாகத்தை உறுதி செய்து, அவர்களே தங்களது முன்னேற்றத்துக்கு பொறுப் பேற்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து இலக்குகளையும் எய்தி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சிறப்பான சாதனைகள் பல புரிந்துள்ளது என உலக வங்கியின் இடைக்கால மதிப் பீட்டுக்குழு பாராட்டியுள்ள தோடு, மாநிலத்தின் மற்ற பகுதி களில் உள்ள ஏழை, எளியோரை யும் பயன்கள் சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை யை ஏற்று, இத்திட்டத்தின் காலத்தை நீட்டிக்கவும், செயல் பாட்டுப் பகுதிகளை விரிவாக் கவும் உலக வங்கி இசைவளித் துள்ளது. இதன் அடிப்படையில், திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ் ணகிரி, கரூர், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக் கோட்டை ஆகிய 10 மாவட் டங்களில் உள்ள 46 வட்டாரங் கள் மற்றும் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருவண் ணாமலை ஆகிய மாவட்டங் களில் கூடுதலாக 4 வட்டாரங் களைச் சேர்த்து மொத்தம் 50 வட்டாரங்களில் உள்ள 1661 ஊராட்சிகளில் வசிக்கக்கூடிய 3.8 லட்சம் குடும்பங்கள் பயன டையும் வகையில் ரூ.950 கோடி கூடுதல் நிதி உதவிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இக்கூடுதல் நிதியுதவியில், ரூ.883 கோடி தொகை கிராம வாழ்வாதார நிதியாகவும், ரூ.22.50 கோடி தொகை மாவட்ட மற் றும் மாநில அளவில் வாழ்வா தார திட்டங்களுக்கும், ரூ.44.50 கோடி தொகை திட்ட மேலாண் மைக்கும் பயன்படுத்தப்படும். மேலும், செப்டம்பர் 2011 இல் நிறைவடைய இருந்த இத்திட்ட காலத்தை செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 3 ஆண்டு காலத்துக்கு நீட்டிக்கவும் உலக வங்கி அனுமதியளித்துள் ளது. இந்த கூடுதல் நிதியுதவி யையும் சேர்த்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.1,667 கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை, எளியோர், ஒதுக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஆற்ற லைப் பெருக்கி, நிதி மற்றும் பல்வகை உதவிகளையும் வழங்கி, அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் முனைப்போடு செயல்படுத்தவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment