கடல்சார் வாரியம் சார்பில் தமிழக அரசுக்கு றீ4.75 கோடியை முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதியால் 1997ம் ஆண்டு தமிழ் நாடு கடல்சார் வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மேம்பாட்டுக்காக 2007ல் சிறு துறைமுகங்களுக்கான கொள்கையை தமிழக அரசு வகுத்தது. இதன் பயனாக தமிழகத்தில் சிறு துறைமுகங்களின் எண்ணிக்கை 11ல் இருந்து 22ஆக உயர்ந்தது. இத்துறைமுகங்கள் மூலம் 2009&10ம் ஆண்டில் 11.75 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இதுவே ஒரு ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளில் மிக அதிக அளவு. இதனால் தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் மொத்த வருவாய் றீ22.57 கோடி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009 &2010ம் ஆண்டின் வருவாயில் இருந்து தமிழக அரசுக்கான வருவாய் பங்கு தொகையாக றீ4.75 கோடி காசோலையை முதல்வர் கருணாநிதியிடம், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பில் அதன் தலைவரும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநா தன் நேற்று (01.11.2010) வழங்கினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் எஸ்.மாலதி, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் கோ.சந்தானம், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எஸ்.சாய்நாத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment