கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது - முதல்வர் கருணாநிதி திட்டவட்டம்


எந்தக் காரணத்தை கொண்டும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டப் பேரவையில் 11.10.2010 அன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாலபாரதி(மார்க்சிஸ்ட்), குணசேகரன்(இந்திய கம்யூ.) ஆகியோர் ஒழுங்குப் பிரச்னை எழுப்ப முயன்றனர்.
அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, “திடீரென்று பிரச்னை எழுப்பினால் பதில் கூற முடியாது. பதில் கூறாவிட்டால் அமை ச்சர் பதிலளிக்கவில்லை என்று வெளியே வரும். எனவே முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அதையடுத்து மறியல் போராட்டம் தொடர்பாக விவசாயிகள் கைது செய்யப்பட்டது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அன்பழகன்(அ.தி.மு.க.):
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 ஏக்கர் நிலம் கேட்கவில்லை. பால், கரும்புக்கு கூடுதல் விலை கேட்டார்கள். ஜப்தியை கைவிட வேண்டும் என்றும் இலவச மின்சார திட்டத்திற்கு மின் மீட்டர் பொருத்துவதால் திட்டம் ரத்தாகும் என்ற அச்சத்தாலும் போராடினார்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
ஏதோ திடீரென்று இந்த அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்யப் போகிறது என்று ஒரு தவறான பிரசாரத்தை எதிர்க்கட்சியிலே உள்ள சிலர், விவசாயிகள் மத்தியில் செய்து அதை நம்பி அப்பாவி விவசாயிகள் சிலர் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள். இலவச மின்சாரம் எந்தக் காரணத்திற்காகவும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று சொல்லியும்கூட சிலர் அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்.
நான் இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன். நிச்சயமாக இந்த இலவச மின்சாரம் என்பது ரத்து செய்யப்பட மாட்டாது. ஏனென்றால், இதைக் கொண்டு வந்தவர்களே நாங்கள்தான் இலவச மின்சாரத் திட்டத்தைத் தமிழ்நாட்டிலே அறிமுகப்படுத்தியதே நாங்கள்தான். நாங்களே, நாங்கள் பெற்ற பிள்ளையைக் கழுத்தை முறித்து எறியமாட்டோம். (தொடர்ந்து அ.தி.மு.க. உறுப் பினர் பேச முயன்றார்)
அமைச்சர் துரைமுருகன்:
முதல்வர் திட்டவட்டமாக அறிவித்த பிறகும் இதற்கு மேல் இது பற்றி யாரும் விளக்கம் தர முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் கரும்பு, பால் விலை உயர்வு பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேச முயன்றனர்.
நிதி அமைச்சர் அன்பழகன்:
கூடுதல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கு கொள்ள ஏராளமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு விவாதம் எடுத்துக் கொள்வதாக நேற்று சொல்லப்பட்டது. இப்போது இந்த பிரச்னையை எடுத்தால் விவாத நேரம் குறைந்து விடும்.
ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.):
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என்றால் புதிய மின் மோட்டார்கள் பொருத்துவது ஏன்? மின்சார மீட்டர்கள் எதற்கு? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:
எதற்கு புதிய மோட்டார் என்று கேட்டார். 2 தினங்களுக்கு முன் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வினியோகத்தில் இழப்பை (லைன் லாஸ்) குறைப்பதற்காக புதிய மோட்டார் பொருத்தப்படுகிறது. ஆனால் மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட மாட்டாது என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
விடியல் சேகர் (காங்கிரஸ்):
கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கினீர்கள். இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்ட போது அதை எதிர்த்தது நீங்கள்.
(அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.)
ஜி.கே. மணி:
கரும்பு விலையை நிர்ணயிக்க முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும். வண்டி வாடகை, வெட்டுக் கூலி தர வேண்டும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது என்று கூறி அச்சத்தை போக்கியதற்கு நன்றி. பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை தர வேண்டும். கைதான விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.
டில்லிபாபு (மார்க்சிஸ்ட்):
சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். விவசாய சங்க தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும். பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி சங்க தலைவர்களுடன் பேசுவதாக கூறினீர்கள். ஆனால் பேசவில்லை.
முதல்வர் கருணாநிதி :
கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற நிலை எடுத்து வேண்டுகோளாக அவை முன்வைத்திருக்கிறார்கள். யாரையும் வேண்டுமென்றே கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு இந்த அரசு செயல்படவில்லை.
அவர்களெல்லாம் மறியல் என்று சொன்ன காரணத்தினால் தான் அந்த மறியல் போராட்டத்தை சட்டசபைக்கு முன்பு நடத்துவோம் என்று அறிவித்த காரணத்தினால்தான், அப்படி முன்னேறி வந்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதைப் பற்றி பிரச்னை ஒன்றுமில்லை.
இங்கே பேசிய மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களும் சொன்ன, வேண்டுகோள் என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால், எதிர்க்கட்சியினர் என்னை வேண்டிக் கேட்டுக் கொள்கின்ற அளவிற்கு நான் உயர்ந்தவன் அல்ல. அதனால் அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்ள அவசியமில்லை.
முன்பு நடைபெற்ற ஆட்சியிலே எப்படியெல்லாம் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்? எப்படியெல்லாம் கைதுகள் நடைபெற்றன? என்ன நிலைமையிலே அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதெல்லாம் நாடறிந்த செய்திதான். இலவச மின்சாரம் ரத்து ஆகிவிடும் என்ற பொய்ப் பிரசாரத்தை நம்பி அதற்காகப் போராடியவர்கள், கரும்புக்கு ரூ.3000 என்று விலையை உயர்த்த வேண்டும் என்று போராடியவர்கள் என்று சிறையிலே இருப்பவர்கள் மொத்தம் 196 பேர்தான்.
நீங்கள் எழுப்பிய குரலில் சட்டமன்றத்திற்கு மதிப்பளிக்க வேண்டும், ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற முறையில் அதற்கு அடையாளமாக இந்த 196 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று உங்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். எதிர்க்கட்சியிலே ஒருவரும் கையொலி எழுப்ப விரும்பவில்லை. இதுதான் இங்குள்ள எதிர்க்கட்சியினுடைய மாண்பு என்பதைப் பார்வையாளர்கள் பத்திரிகையாளர்கள் உணர்ந்து கொண்டால் சரி.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று மணி பேசினார். இன்றைக்குக் கொள்முதல் விலை உயர்த்த வேண்டுமென்று சொல்வார்கள். நாங்கள் கொள்முதல் விலையைச் சற்று உயர்த்தினால் பிறகு வாங்கு வோர் சார்பாக விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிலை ஏற் படும். வாங்கிப் புசிப் போர், உற்பத்தி செய்வோர் இருசாராரையும் அழைத்து பேசி நல்ல முடிவு பால் விலையைப் பற்றி எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்


No comments:

Post a Comment