சட்டமன்றத்தில் 09.10.2010 அன்று நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் 2010-2011 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டமன்றப் பேரவைக்கு முன் வைத்து உரையாற் றினார். அதில் அவர் தெரிவித்திருப்ப தாவது:
2010-2011 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்கிறேன். துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 3607 கோடியே 27 லட்சம் நிதியை ஒதுக்குவதற்கு வகை செய்கின்றன. இதில் ரூ 2,168 கோடியே 58 லட்சம் வருவாய் கணக்கிலும், எஞ்சிய தொகை யான ரூ. 1,438 கோடியே 69 லட்சம் மூல தனம் என்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
2010-2011 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் சட்டமன்றப் பேரவையில் 2010 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாளன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் புதுப் பணிகள் மற்றும் புதுத் துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப் பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதலைப் பெறுவதும், இத்திட்டங் களுக்கான எதிர்பாராத செலவு நிதியி லிருந்து விடுவிக்கப்பட்ட தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும்தான் இந்தத் துணை மானியக் கோரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இத்தகைய சில புதிய செலவு பொறுப்புகள் இந்த அரசால் மேற் கொள்ளப்பட்டன. இந்த அரசு ஏழை, எளிய, பாமர மக்களின் மேம்பாட்டிற்காக ஆற்றியுள்ள அரும்பணிகளை யாரும் மறுக்க முடியாது. இதுவரை 4,79,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மகளிரின் பொருளாதார மேம் பாட்டுக்கு ரூ 15 கோடியே 32 லட்சம் செலவில் ஏழைகளுக்காகவே தொண் டாற்றி வாழ்ந்த அணையா விளக்கு அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவினை இந்த அரசு கொண்டாட முடிவு எடுத்துள்ள இந்த வேளையில் அவரது பெயரால் ஒரு மாபெரும் வணிக வளாகத்தை இந்த ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நாள் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இப்பணிக் காகத் தேவைப்படும் கூடுதல் நிதியை மானிய நிதியாக ரூ 7 கோடியே 3 லட்சம் தற்போது மானியக் கோரிக்கை எண்.42 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என்பதன் கீழ் துணை மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அனை வருக்குமான பொது விநியோகத் திட்டம் மூலம் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியும் சில அத்தியாவசியப் பொருள்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என மளிகைப் பொருள்கள் 10 அடங்கிய பொட்டலம் மற்றும் பாமாயில் எண்ணெய் ஆகிய வற்றை சிறப்புப் பொது விநியோகத் திட் டத்தின் மானிய விலையில் வழங்குவதால் அரசு உணவு மானிய செலவு ரூ 3,750 கோடியாக மதிப்பிடப்பட்டது. இத்திட் டத்தை சிறப்பாகச் செயல்படுத்த ரூ 200 கோடி கூடுதலாக அரசு மானியம் தேவைப் படுகிறது. இத்தொகை மானியக் கோரிக்கை எண்.13 உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்பு என்பதன்கீழ் துணை மதிப்பீடு களில் சேர்க்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல் கொள் முதல் செய்ய அரசு குறுகிய காலக் கடனாக ரூ. 500 கோடி அனுமதிக்க உத்தேசித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு, 1 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 756 குடும்பங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அய்ந்தாவது கட்டமாக ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வரும் 40 லட்சம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளுடன் கூடுதலாக தேவைப்படும் 10 லட்சம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற் காக ரூ. 261 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் பயிற்சி யுடன் கூடிய வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரும் திட்டம் கடந்த நாளன்று தினத்தன்று முதல் அமைச்சர் அவர்களால் அறிவிக் கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத் துவதற்காக அரசு ரூ 50 கோடி அனு மதித்துள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதில் இந்த அரசு மிகுந்த முனைப் புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டுக் குடி நீர் வழங்கும் திட்டங்களின் பராமரிப்பு உள்பட பல்வேறு செலவினங்களுக்காக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்துக்கு மானியமாக ரூ 84 கோடியும், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல் படுத்த ரூ 270 கோடியும் அரசு அனு மதித்துள்ளது.
குடிசைகள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க தீட்டப்பட்ட கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் கூரையுடன் கூடிய வீடுகளுக்கான அலகுத் தொகை யினை ரூ 60 ஆயிரத்தில் இருந்து ரூ 75 ஆயிரமாக உயர்த்த இந்த அரசு ஆணை யிட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக ரூ 450 கோடியை அரசு அனுமதித்து உள்ளது. அதே போல் மத்திய அரசின் திட்டமான இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளுக்கும் மத்திய அரசு வழங்கும் நிதியான ரூ 33,750 உடன் கான்கிரீட் கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையான ரூ 26,250அய் மேலும் ரூ 15,000 சேர்த்து மொத்தம் ரூ 41,250 அய் மாநில நிதியாக வழங்கி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு வழங்குவதைப் போலவே ரூ 75,000 என்று அலவுத் தொகையை அனுமதித்து ஆணையிட்டு உள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவினத் திற்காக ரூ 155 கோடியை அரசு அனு மதித்துள்ளது.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்தான உணவு குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உணவூட்டு செல வினத்தையும், உணவின் அளவையும் உயர்த்தி வழங்க கூடுதல் செலவினமாக ரூ 74 கோடியும் வாரம் அய்ந்து நாள்களிலும் நாள்தோறும் ஒரு முட்டை வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக ரூ 125 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.
- இவ்வாறு 09.11.2010 அன்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் 2010-2011 ஆம் ஆண்டிற்கு முதல் துணை மதிப்பீடுகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment