கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 28, 2010

திமுகவின் தொ.மு.ச. வெற்றி-73,450வாக்குகள்!

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுக தொழிற்சங்கமான தொமுச வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் அமைச்சர் நேரு நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில், தொமுச தலைவர் குப்புசாமி, பொதுச்செயலாளர் சண்முகம்.

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். இதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்படும். இந்த ஆண்டு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அரசு அழைப்பு அழைப்பு விடுத்தது.
இதை எதிர்த்து பணியாளர் சம்மேளனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிற்சங்கங்களுக்கு இடையே தேர்தல் நடத்தி, அதில் அதிக வாக்குகளை பெறும் தொழிற்சங்கம் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி, அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான அங்கீகார தேர்தல், மாநிலம் முழுவதும் 513 போக்குவரத்து பணிமனைகளில் கடந்த 25ம் தேதி நடந்தது.
திமுக தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சிஐடியு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 13 சங்கங்கள் போட்டியிட்டன. அண்ணா தொழிற்சங்கத்துக்கு தேமுதிக, ஐனதா தளம், புதிய தமிழகம், மதிமுக உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.


தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து 343 ஓட்டுப் பெட்டிகள், சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மாநகர் மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் ஹாதி முன்னிலையில் நேற்று (27.11.2010) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்ட வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இன்று (28.11.2010) இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 28,173 வாக்குகள் பதிவாகின. இதில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1 லட்சத்து 21,101. தபால் ஓட்டுகள் 6,498, செல்லாத ஓட்டுகள் 574. மொத்தம் செல்லுபடியான ஓட்டுகள் 1 லட்சத்து 27,599.
இதில் தொமுச 73,450 வாக்குகள் (57.31%) பெற்று வெற்றி பெற்றது. சிஐடியு 19,002 வாக்குகள் (14.83%) பெற்று 2வது இடத்தை பெற்றது. அண்ணா தொழிற்சங்க பேரவை (அதிமுக) 15,765 வாக்குகள் (12.30%) பெற்று 3வது இடத்தை பெற்றது.
திமுகவின் தொ.மு.ச. வெற்றி பெற்றுள்ளது.வெற்றி பெற்ற தொமுசவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல நல்ல பலன்களை பெற்று வருகிறார்கள். ஆனால் 2001ம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு விற்க ஆணை பிறப்பித்தார்.

போனஸ் தொகையை 20 சதவீதம் என்பதை 8.33 சதவீதமாக குறைத்தார். 3 ஆண்டு ஒப்பந்த ஊதியத்தை 5 ஆண்டு என்று தன்னிச்சையாக நீட்டித்தார். ஆண்டு தோறும் வழங்கிய பொங்கல் கருணைத் தொகை இல்லை என்று கூறினார்.

முழு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி காலம் 30 ஆண்டுகள் என்பதை 33 ஆண்டுகள் என்று உயர்த்தி ஒய்வூதியத்தில் குழப்பத்தை விளைவித்தார். இதனை எதிர்த்து போராடிய தொழிலாளர்களை பழி வாங்கி சிறைக்கு அனுப்பி பணி மாற்றம், பதவி இறக்கம் செய்து தொழிலாளர்களை பழி வாங்கினார்.

இவை எல்லாவற்றையும் எதிர்த்து போராடிய தொழிலாளர்களுக்கு தலைவர் கலைஞர் ஆறுதல் கூறி வந்தார். மீண்டும் 5வது முறையாக ஆட்சி பொறுப்பெற்ற பிறகு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த நாட்களை ஊதியத்துடன் கூடிய பணி நாட்களாக கருதி அரசு ஆணை பிறப்பித்தார். 5 ஆண்டு ஒப்பந்தம் என்பதை மீண்டும் 3 ஆண்டாக குறைத்து அரசு ஆணை பிறப்பித்தார். போனஸ் தொகை ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.8 ஆயிரத்து 400 ஆக உயர்த்தி வழங்கினார்.

ஓய்வூதியத்திற்கு வருமான வரி விலக்கு பெற்று தந்த ஒரே முதல்வர் கலைஞர்தான். 35 ஆயிரம் புதிய பணியாளர்களை தேர்வு செய்ததுடன் 10 ஆயிரம் புதிய பஸ்களை வாங்கித்தந்து போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தினார்.

இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த தொ.மு.ச. பேரவை போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணியாளர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தவும், ஊதிய முரண்பாடுகளைகளையும், பதவி உயர்வு மற்றும் 5 ஆண்டுக்கு ஒரு ஆய்வுப் பலன்களை பெற்று தரவும், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உள்ள ஊதிய தேக்க நிலையை களையவும், பேருந்து இயக்கம் மற்றும் எரிபொருள் சிக்கனம் என்ற பெயரால் தொழிலாளர்கள் பழி வாங்கப்படுவதை தடுக்கவும் தண்டனைகளை குறைக்கவும் தொ.மு.ச. பேரவை பாடுபடும் என்று தொழிலாளர்கள் மத்தியில் வாக்குறுதிகளை வைத்து ஓட்டு கேட்டது.

மின் வாரிய ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வாடகைபடி மற்றும் இதர சலுகைகளை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்து தொ.மு.ச. வாக்கு கேட்டது.

தொழிலாளர்களுக்கு இடர் வரும்போது, முதல்வர் கருணாநிதியும், தொ.மு.ச. பேரவையும் உறுதுணையாக இருந்து குறைகளை தீர்த்ததை தொழி லாளர்கள் மறக்கவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கி பணிச் சுமையை குறைத்த முதல் அமைச்சர் கருணாநிதிக்கும் தொ.மு.ச. பேரவைக்கும் நன்றி காணிக்கையாக வாக்கு களை அளித்து நன்றி கடன் செலுத்திய தொழிலாளர்களுக்கு தொ.மு.ச. பேரவை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தொ.மு.ச. வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தொ.மு.ச. மீண்டும் நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு மு.சண்முகம் கூறியுள்ளார்.


போக்குவரத்து சங்க தேர்தலில் பங்கேற்ற மற்ற சங்கங்களின் ஓட்டு விவரம் வருமாறு:
புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி - 2,307.
இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் - 4,824.
நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் - 293.
பாட்டாளி தொழிற்சங்க பேரவை - 2856.
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் - 23.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் - 2204.
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் எச்எம்எஸ் பேரவை - 915.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பட்டய (டிப்ளமோ) தொழில்நுட்ப பணியாளர்கள் சம்மேளனம் - 3,942.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் - 1,912.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பட்டதாரி மற்றும் பொது தொழிலாளர்கள் நலச்சங்கம் - 105.

தொழிற்சங்க தேர்த லில் வெற்றி பெற்றதற் கான சான்றிதழை தொழி லாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் செ. குப்புசாமியிடம் தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியான அப் துல் ஹாதி வழங்கினார்.

தமிழகத்தில் 12 ஆண்டு க்கு முன்பு 1998ல் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற தொமுசவுக்கு 26 ஆயிரத்து 577 ஓட்டுகள் கிடைத்தது. இந்த தேர்தலில் கூடுதலாக 46 ஆயிரத்து 873 ஓட்டுகள் வாங்கியுள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் 23 ஆயிரத்து 917 ஓட்டுகள் வாங்கி, இரண் டாம் இடத்தை பிடித்தது. இந்த தேர்தலில் 8 ஆயிரத்து 152 ஓட்டுகள் குறைந்து, 3வது இடத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டு ள்ளது. சிஐடியூ 15 ஆயிரத்து 890 ஓட்டுகள் வாங்கி நான் காம் இடத்தில் இருந்தது. இந்த தேர்தலில் கூடுதலாக 3 ஆயிரத்து 112 ஓட்டுகள் வாங்கி 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பணியாளர் சம்மேளனம், ஏஐடியூசி சங்கங்களின் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து டெப்போக்களிலும் தொமுச அதிக ஓட்டுகள் வாங்கியுள் ளது. ஆனால், மதுரை, குமரி மாவட்டம் மார்த்தாண்டாம் அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போக்களில் மட்டும் சிஐடியூ அதிக ஓட்டு வாங்கியுள்ளது. மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் 585 ஓட் டுகள் பதிவாகின. அதில், சிஐடியூ - 286, தொமுச - 212, அண்ணா தொழிற்சங்கம் - 69, பணியாளர் சம்மேளனம - 10 ஓட்டுகள் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment