கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

அன்று அமைச்சர் - இன்று ராஜா!மானமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி பூதேவர்களால் தஸ்யூக்கள் இனத்தைச் சேர்ந்த மானமிகு ஆ.இராசா பழிவாங்கப்பட்டுள்ளார்.

நன்மையேயன்றி யாருக்கும் தீது செய்து அறியாத மாவலி சக்ரவர்த்தியின் மீது பொறாமை கொண்டு, மகாவிஷ்ணு என்னும் நயவஞ்சகன் சூழ்ச்சிப் பொறி வைத்து, மாவலியின் தலையில் கால் வைத்து பாதாளம் வரை அழுத்திக் கொன்றதாகப் புராணம் கூறும்.

இளமையும், துடிப்பும், நேர்கொண்ட பார்வையும், செயல்திறனும் கொண்ட தந்தை பெரியாரின் மாணவன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அன்புத் தம்பி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கொள்கை உறவாளி - போராளி, ஒடுக்கப்பட்ட சமூக வானில் மின்னும் ஒளிக்கதிர் நவீன பூதேவர்களான பார்ப்பன சக்திகளால், பார்ப்பன ஊடகங்களால் பழிவாங்கப் பட்டார்.

சவப்பெட்டியிலும் ஊழல் செய்த உன்மத்தர்கள், சுடுகாட்டிலும் கூட ஊழல் செய்ய முடியும் என்று சாதனை படைத்த சழக்கர்கள், டான்சி ராணிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிலங்களைப் பறித்து, நெடுமாளிகை கட்டி நித்திரை கொள்ளும் நவீன பூர்ஷ்வாக்கள் நான்கு விரல்களைத் தன் பக்கம் நீட்டிக் கொண்டே மானமிகு இராசாவைப் பார்த்து ஒரு விரலைக் காட்டி நீ குற்றவாளி! என்று நெஞ்சம் நடுங்காமல் - மனச்சாட்சி குத்திக் குடையாமல் குற்றப்பத்திரிகை படிக்கும் குணக்கேடர்களை மக்கள் மன்றம் குமுறும் எரிமலையாகக் கண்காணித்துக் கொண்டுதானிருக்கிறது.

அந்த வெப்பக் கடலின் ஒரு துளியைத்தான் நேற்று மாலை சென்னை விமான நிலையம் - காமராசர் முனையத்தின் வளாகத்தில் காண முடிந்தது.

அடேயப்பா, ஆயிரக்கணக்கான மக்கள் அதற்குள் எப்படித்தான் திரண்டனரோ! எங்குநோக்கினும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளின் கொடிகள்! கொடிகள்!!

அலைகடலுக்கு ஆத்திரம் வந்ததோ எனும் வகையில் வான்முட்டும் ஒலி முழக்கங்கள்!

ஒழிக! ஒழிக!! பார்ப்பன ஆதிக்கம் ஒழிக! ஒழிக!!

ஒழிக! ஒழிக!! பார்ப்பன ஊடகங்கள் ஒழிக! ஒழிக!!

எங்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சியாளர் அம்பேத்கரும், தமிழர் தலைவர்கள் கலைஞரும், வீரமணியும் கட்டிக்காத்த இனவுணர்வைத் தொட்டுப் பார்க்க நினைத்திட்டால் தூள், தூள் தூளாவாய்! என்முழக்கங்களை இளைஞர் சேனை கோடை இடியாக இறக்கியது.

அநியாயமாக, அடக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பழி வாங்கப்பட்டார் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மிகக் கூர்மையாகக் கொதித்து நிற்பதைக் காண முடிந்தது.

மாண்புமிகு போகலாம் - வரலாம் - தட்டிப் பறிக்கப்படலாம் - ஆனால் மானமிகுவைப் பறிக்க முடியுமா என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் (15.11.2010) கந்தகக் கர்ச்சனையை அங்குக் காண முடிந்தது.

அன்புக் கரமேந்தி அரவணைத்து முத்தமிடத் தயார்! தயார்!! என்பதை அந்த மக்கள் கடலில் எழுந்த உணர்ச்சி முத்துக்களின் முறுவலில் காண முடிந்தது.

அடேயப்பா, என்ன பற்று, எத்தகைய வாஞ்சை!

அதே நேரத்தில் அவரைப் பழிவாங்கிய சக்திகள் மீது எத்தகைய எரிச்சல் - அமிலப் புயல்! கோபாக்கினியாக சிவந்த விழிகளாம் வாட்கள்!

இது வீண் போகாது! தமிழின உணர்வைக் காயப்படுத்திய கூட்டம், வாக்குக் கேட்க எங்கள் முன்தானே வந்தாக வேண்டும்? அப்பொழுது வட்டி போட்டு பழி வாங்கிட எங்களுக்குத் தெரியும், ஆம், மிக நன்றாகவே தெரியும் என்ற உணர்ச்சி - குமரி முதல் திருத்தணி வரை செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக - செறிவாகக் குறிப்பிட்டபடி, 1971 தேர்தல் என்னும் தோசையை 2011 தேர்தலில் திருப்பிப்போட தமிழர்கள் தயாராகி விட்டனர்.

அவர் வெறும் அமைச்சர் - அன்று. இன்றோ அவர் ராஜா! மக்கள் நெஞ்சமென்னும் சிம்மாசனத்தில் மலிவுப் பதிப்பாக செம்மாந்த முறையில் வீற்றிருக்கும் ராஜா.

பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் பின் புத்தி. நனைத்து நனைத்துச் சுமந்து தீர வேண்டிய நாசகால நச்சுக் கூட்டம் அது!

எப்பொழுதெல்லாம் தமிழர்கள் இனவுணர்வு என்னும் புலியின் வால் மிதிக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் இனவுணர்வின் சீற்றத்தை நேர்கோணத்தில் கொட்டித் தீர்ப்பார்கள்.

அற்பர்களின் அற்ப சந்தோஷம் ஆடி அடங்கட்டும்!

ஒருமுறை மானமிகு ராஜா அவர்கள் தமிழ் மண்ணில் வலம் வந்தால் போதும்.

கறுஞ்சிறுத்தைக் கூட்டமும், இனமானத் தமிழ்க் கடலும், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கமும், சமூக நீதி உணர்வின் வெள்ளமும், மண்ணையும் விண்ணையும் அளந்து மானமிகு ராஜாவின் வடிவில் தந்தை பெரியார் கொளுத்திச் சென்றுள்ள தன்மான - இனமான உணர்வின் உயரம் அகலமும், ஆழமும் எத்தகையது என்பதை - கோடி டிகிரி உச்சத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை நிரூபிப்பார்கள், நிரூபிப்பார்கள் என்பதில் அய்யமில்லை, அய்யமில்லை!

ராஜா அவர்களே வருக! தமிழ் மண்ணை ஒருமுறை வலம் வருக! வருக!! என தமிழின மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளும் வந்திடுமோ!

திரு. இராசா ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் - அவருக்கு இதுமாதிரியான வரவேற்பு சரியா என்ற செய்தியாளரின் கேள்விக்கு - தொலைத் தொடர்புத் துறையில் புரட்சிகரமான செயலாக்கங்களை செய்துள்ள ஆ.இராசா தாழ்த்தப்பட்ட தோழர் என்ற காரணத்தால் பழி சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரை ஆதரிக்க திராவிடர் கழகம் கடமைப்பட்டுள்ளது. மேலும் இராசா அவர்கள் குற்றவாளி என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லாத நிலையில் அவர் குற்றம் புரிந்தார் என்று சொல்லுவது எந்த வகையில் சரி என்றும் கழகத் தலைவர் வினா எழுப்பினார். (என்.டி.டி.வி. பேட்டி, 16.11.2010)

நன்றி : விடுதலை

No comments:

Post a Comment