பிராமணருக்கு முன்னாலே அத்தனைபேரும் சூத்திரர்கள்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டி யாரும் பிராமணருக்கு முன்னாலே சூத்திரர்தான். இங்கே -ஏழையாக இருக்கிற வலையரும் பிராமணருக்கு முன்னாலே சூத்திரர்கள்தான். எங் களைப் போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்கிறபோது பிராமணர் களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்திவரவேண்டும் என்பதற் காகத்தான் சொல்கிறேன்.
பிராமணரிடத்திலேயா நாம் கோபித்துக்கொள்வது? என்னுடைய முட்டாள்தனத்தை வைத்து நீ என்னை ஏமாற்றலாமா? என்று கோபித்துக் கொள் வதைப் போல _ நாம் முட்டாளாக இருந் தால் எவனும் நம்மை ஏமாற்றத்தான் செய் வான். ஆகவே நாம் யார் என்று கேட்டால், நாம் ஜாதி அடிப்படையை ஒத்துக் கொள்ளாத _ ஏற்றுக் கொள்ளாத வள்ளுவர் வழியிலே வந்த _ வடலூர் வள்ளலார் வழியிலே வந்த _ தமிழ்ப் பண்பாட்டு வழியிலே வந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேதான் இந்துக்கள் என்று சொல்வதிலேகூட எங்களுக்கு அக்கறை இல்லை. இங்கே பேசிய நண்பர்கள் சொன் னார்கள். நம்முடைய முகவை ராமச் சந்திரன் பேசுகிறபோது சொன்னார். கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா? இந்துவைத்தானே கண்டிக்கிறீர்கள் என்று வேறு ஒரு கட்சியிலே உள்ள ஒருவர் சொன்ன கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார். நான் இந்துவைக்கூடக் கண்டிக்க வில்லை. எங்களை இந்து என்று சொல் கிறான். இந்து என்று சொன்னால் இந்தப் படிக்கட்டுகளிலே ஏதாவது ஒரு படிக்கட்டிலே நின்றாக வேண்டும். நான் இந்து இல்லை என்று சொன்னால் படிக்கட்டிலே நிற்கவேண்டியதில்லை. இந்து என்று சொன்னால் நான் சூத்திரன். இந்து என்று சொன்னால் நான் பிராமணருடைய உயர்வை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்து என்று சொன்னால் நான் நால்வகை ஜாதிக்கும் ஆட்படவேண்டும். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிற காரணத் தாலேதான் நான் தமிழனே தவிர இந்து அல்ல என்று சொல்லக் கடமைப்பட் டிருக்கிறேன். - பேராசிரியர் க. அன்பழகன்
(பள்ளத்தூரில் விடுதலை 25.3.1982)
No comments:
Post a Comment