தேர்தல் பணியாற்றுவதற்காக மாவட்ட அளவில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நிதி அமைச்சரும் தி.மு.க. பொதுச் செயலாளருமான அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் பணி ஆற்றிடவும் மேற்பார்வையிடவும் தி.மு.க. முன்னணியினரை கொண்ட குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பி. அசோக்குமார், பி.எம்.மன்னன்(கன்னியாகுமரி), சேடப்பட்டி முத்தையா, எம். உதயகுமார்(தூத்துக்குடி), ஏ.நாகராஜன், பி.செந்தில்குமார் (திருநெல்வேலி), எஸ்.டி.டி. இளங்கோவன், எம்.பாண்டியன் (விருதுநகர்), காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, எம்.ஏ.சேக்முகமது (தேனி), கா.முத்துராமலிங்கம், ஏ.பிரபாகரன் (மதுரை மாநகர்), ஜி.எம்.ஷா, ஹெலன் டேவிட்சன் எம்.பி.(திண்டுக்கல்), சுப. துரைராஜ், எம். வைத்தியநாதன் (மதுரை புறநகர்), வி.பி.ராசன், ஆதவன் (எ) ஜலாலுதீன் (ராமநாதபுரம்).
எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி, டேவிட் செல்வின்(சிவகங்கை), மத்திய அமைச்சர் ஆ.ராசா, சுபா.சந்திரசேகரன் (கோவை), சுப்புலட்சுமி ஜெகதீசன், பா.அருண்குமார் (நீலகிரி), என்.கே.கே. பெரியசாமி, பா.மு.முபாரக் (நாமக்கல்), கே.சி. பழனிச்சாமி, சாவல்பூண்டி சுந்தரேசன் (ஈரோடு), எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், திருச்சி மு.அன்பழகன் (திருப்பூர்), பேரவை மு.சண்முகம், அரக்கோணம் மு.கண்ணையன் (விழுப்புரம்), எஸ்.ரகுபதி, குத்தாலம் பி. கல்யாணம் (கடலூர்), இள.புகழேந்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம்(திருவாரூர்), செஞ்சி ராமச்சந்திரன், ஈ.ஜி.சுகவனம் (நாகை), க.பொன்னுசாமி, பி.டி.சி. செல்வராஜ் (தஞ்சை).
டி.ஆர்.பாலு எம்.பி, திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் (சேலம்), டி.எம். செல்வகணபதி எம்.பி, இரா.திருமகன் (தர்மபுரி வடக்கு, தெற்கு), முகமது சகி, ஆ.த. சதாசிவம் (கிருஷ்ணகிரி), கே.பி.ராமலிங்கம், கோவி. செழியன் (வேலூர்), பார்.இளங்கோவன், தாயகம் கவி (திருவண்ணாமலை), சட்டப் பேரவை துணை தலைவர் பி.வி.துரைசாமி, சுப.த.சம்பத் (திருச்சி), கு.பிச்சாண்டி, தி.வ.விசுவநாதன் (புதுக்கோட்டை), பொள்ளாச்சி மா.உமாபதி, க.வேங்கடபதி (அரிய லூர்),
ரத்தினசபாபதி, வழக்கறிஞர் கிரிராஜன் (பெரம்பலூர்), டி.எஸ். கல்யாணசுந்தரம், ஈரோடு இறைவன் (கரூர்), ஆ.கிருஷ்ணசாமி, சன் பிராண்ட் ஆறுமுகம் (தென்சென்னை), சேலம் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் (வடசென்னை), அசன்முகமது ஜின்னா, பொன்னுராம் (காஞ்சிபுரம்), ஆதிசங்கர் எம்.பி, ராமமூர்த்தி (திருவள்ளூர்).
இந்த குழுவினருடன் நிர்வாகிகள் இணைந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார். மற்றொரு அறிவிப்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன்
’’ஏற்கனவே உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களாக உள்ளவர்களுடன் கோவை மு.கண்ணப்பன், ஈரோடு சு.முத்துசாமி ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.
தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக செஞ்சி ந.ராமச்சந்திரனும், விவசாய அணிச் செயலாளராக பணியாற்றிவரும் கே.பி.ராமலிங்கத்துடன் கரூர் ம.சின்னசாமியும் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment