தமிழ்நாட்டில் உள்ள 104 அணைகள் ரூ.745 கோடி செலவில் பழுது பார்த்து மேம்படுத்தப் படும் என்று முதலமைச் சர் கலைஞர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அரசு 21.11.2010 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள அணைகளை 745 கோடியே 49 லட்சம் ரூபாய் உலக வங்கி நிதி யுதவியுடன் சீரமைக்க வும், மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந் தத் திட்டத்தை அடுத்த நிதி ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளில் படிப்படி யாகச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறை யின்கீழ் உள்ள 66 அணை களையும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 38 அணைகளையும் புன ரமைப்பு செய்து மேம் படுத்துதல் தொடர்பான திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழக அரசின் தலை மைச் செயலாளர் தலை மையில் 11 உறுப்பினர் களைக் கொண்ட உயர் நிலைக் குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கலைஞர் நேற்று உத்தர விட்டார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள 104 அணைகளும் முழுவது மாக பழுதுபார்க்கப் பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்ட மாக பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட் டில் உள்ள 12 அணை களும், மின்சார வாரி யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அணைகளும் பழுதுபார்க்கப்பட உள் ளன. சென்னை மண்ட லத்தில், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை, கல்லக்குறிச்சி அடுத்துள்ள கோமுகி அணை, காட்பாடியை அருகே உள்ள ராஜா தோப்பு அணை, குடி யாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணை ஆகியவை பழுதுநீக்கப் பட உள்ளன. நெல்லை மாவட்டத் தில் 6 அணைகள் திருச்சி மண்டலத்தில் ஜெயங் கொண்டம் அருகே உள்ள சிட்டமல்லி அணை யும், வேடசந்தூர் அருகே உள்ள கொடனாறு அணையும் சீரமைக்கப் படுகின்றன. மதுரை மண்டலத்தில், தென் காசி அருகே உள்ள அட விநாயனார் கோவில் அணை, நாங்குனேரி அருகே உள்ள வடக்கு பச்சையாறு, கொடுமுடி யாறு, வள்ளியூர் அருகே உள்ள பொய்கை ஆறு, மணிமுத்தாறு, நம்பி யாறு அணை ஆகியவற் றிலும் பழுதுநீக்கும் பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மின்சார வாரி யத்தின் கீழ் உள்ள அணை களான அவலாஞ்சி, போர்த்திமண்டு, கிளின் மோர்கன், காடம்பாறை, முக்கூர்த்தி, சேர்வலாறு ஆகிய 6 அணைகளும் பழுதுநீக்கப்பட உள்ளன. மேற்சொன்ன 18 அணைகளிலும் கரை களும், பக்கவாட்டுச் சுவர் களும் வலுப்படுத்தப் படும். வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீர மைக்கப்படும். அணை யின் உள்புறம் உள்ள கசிவுநீரை வெளியேற் றும் வடிகுழாய்கள் சுத் தம் செய்யப்படும். மணி முத்தாறு, சேர்வலாறு அணைகளின் முன்பக் கச் சுவர்கள் தண்ணீர் உட்புகாதவாறு சீரமைக் கப்படும். மதகு கதவு களும், நீர்வழிப் போக்கி களும் புனரமைக்கப்படும். அணைகளில் உள்ள சாலைகள், இணைப்புச் சாலைகள் சீரமைக்கப் படும். அணைகளில் உள்ள மின் விளக்குகள், தகவல் தொடர்பு கருவிகள், எச்சரிக்கை அறிவிப்பு கருவிகள், மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்ற கருவிகளும் பழுதுநீக்கப் படும். மேற்கண்ட தக வலை பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Monday, November 22, 2010
உலக வங்கி நிதி உதவியுடன் 104 அணைகள் ரூ.745 கோடி செலவில் பழுதுநீக்கம் - முதல்வர் கலைஞர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment