ஆ.இராசாமீது குற்றம் சுமத்தியும், அவரைக் கைது செய்யவேண்டும் என்று கூறியும், அவதூறு செய்யும் ஜெயலலிதாவுக்கு மற்றவர்கள்மீது குற்றம் சுமத்தும் தகுதி உண்டா என்பது குறித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதி இருப்பதாவது: கேள்வி: இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாது காக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராஜா அவர்களை பதவி விலகுமாறு தாங்கள் செய்த பிறகும் ஜெயலலிதா அவரை கைது செய்யவேண்டும், வழக்கு தொடரவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? கலைஞர்: எதிர்க்கட்சி என்றால் மேலும் மேலும் எதை யாவது சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. தலைவிமீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன் றத்தால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும் நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவைகள் செல்லாது என்று கூறப்பட்ட பின்னரும் - ஆளுநரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் எண்ணுகிறார் போலும்! கட்சிக் கட்டுப்பாட்டினை யேற்று பதவி விலகிய தம்பி ராசா தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படிதான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப் பதையும் மறந்துவிடக் கூடாது. இன்னும் சொல்லவேண்டுமேயானால், அரசுக்குச் சொந்த மான டான்சி நிலத்தை முதலமைச்சராக பதவிப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தபோது குறைந்த விலைக்கு வாங்கியது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றம்வரை நடந்து அதிலே நீதிபதி கள் கூறும்போது, பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள் ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை தொடர்புடைய ஆவணங்களில் ஜெயலலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கை காரண மாக ஏலத்திற்கு வருகின்ற சொத்துக்களை ஏலம் போடுகின்ற ஒரு சாதாரண அதிகாரியோ, கால்நடைகளை அடைத்து வைத்து அதனைப் பாதுகாக்கும் அதிகாரியோ, ரயில்வே சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரியோ அவர்களுடைய அதிகாரத்திலே உள்ள சொத்துக்களை விலைக்கு வாங்க முடியாது. வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்தபோதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதலமைச்சரே அரசின் சொத்துக்களை வாங்க எத்தனித்து விட்ட நிலையில், அதிகாரவர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதலமைச்சர் ஜெயா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும். நியாயமாக பேச வேண்டுமென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதலமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள்தான் எங்களுடைய மனச்சாட்சி யைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும், அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார். (Further, criminal law is meant to deal with criminals ordinarily, while code of conduct is observed as gentlemen’s agreement. இந்த அளவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெய லலிதா என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டு, ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்கவேண்டும் என்று கலைஞர் எழுதியுள்ளார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Monday, November 22, 2010
ஆ.இராசாமீது குற்றம் சுமத்த ஜெயலலிதாவுக்குத் தகுதி உண்டா? - முதல்வர் கலைஞர் தொடுக்கும் வினா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment