கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 8, 2010

ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை : மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் கோரிக்கை



ஒருங்குறியீட்டுக் கூட் டமைப்பில் (யூனிகோர்டு கன்சார்ட்டியம்) சமஸ் கிருதம் மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம் பெறச் செய்வது தொடர் பான முடிவை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு முதல் அமைச் சர் கலைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் எழுதி யுள்ள கடிதம் வருமாறு:

நமது பாரம்பரிய அறிவு பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர், இண்டர் நெட் மற்றும் மின்ஊட கங்களில் இடம்பெறும் வகையில் வேதகால, சமஸ்கிருத மற்றும் கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ போன்ற எழுத் துக்கள்) ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் (யூனி கோடு கன்சார்ட்டியம்) சேர்ப்பது தொடர்பாக அந்தக் கூட்டமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ள விவரம் தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய திட்டம், உலகம் முழுவதும் உள்ள தமிழர் கள் மத்தியில் கேள் வியை எழுப்பி உள்ளது. இந்த திட்டத்தை குறிப் பாக, கிரந்த எழுத்துருக் களுடன் 5 தமிழ் எழுத் துக்களை சேர்ப்பது தொடர்பாக, ஒருங்குறி யீட்டு கூட்டமைப்பிடம் சமர்ப்பிப்பதற்கு முன் பாக தமிழறிஞர்கள், மற்றும் மொழியியல் அறிஞர்களிடம் தேவை யான அளவு ஆலோ சனை செய்யப்படவில்லை என்று பெரும்பாலா னோர் கருத்து தெரிவித் தனர். இதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி அமைச்சர்கள், தமிழறி ஞர்கள், மொழியியல் அறிஞர்கள், தொழில் நுட்ப நிபுணர்களை வர வழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.

அந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேரா சிரியர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்முடி மற்றும் மூத்த அமைச் சர்களும், தமிழறிஞர் களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தை சாமி, கான்பூர் அய்.அய்.டி. தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவி ஞர் கனிமொழி எம்.பி., எழுத்தாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சிங்கப் பூர் தகவல் தொழில் நுட்ப நிபுணர் அரவிந் தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமொழி எழுத்துக் களை ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் இடம் பெறச்செய்யும் திட் டத்தை முடிவு செய்வ தற்கு முன்பாக தமிழ றிஞர்களுடன் விரிவான ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ றிஞர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு நியமிக்கப் பட்டு, ஆலோசனை நடத்தி, அந்தத் திட்டம் தொடர்பாக பரிந்துரை கள் பெறப்படும்.

மத்திய அரசு ஏற்கெ னவே இந்தத் திட்டம் தொடர்பான கருத்து ருவை ஒருங்குறியீட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டதால், அதுதொடர்பாக உட னடியாக முடிவு செய்து விடாமல், தமிழறிஞர் கள், மொழியியல் அறி ஞர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பெறப்படும் கருத்துகள் வரும்வரை சற்று காத் திருக்குமாறு அந்த கூட் டமைப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா அறிவுரை வழங்க வேண் டும்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment