ஸ்பெக்ட்ரம் சம்பந்தமான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அரசில் இருந்து வெளிவராத நிலையில், ஊடகங்களில் எப்படி வெளியானது என்றும், இதுகுறித்து மத்திய அரசும், மத்திய உள்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெலிகாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (சிஏஜி) ரூபாய் 1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்த அறிக்கை செய்தி அதிகார பூர்வமாக குடியரசு தலைவர் அலுவலகத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ அல்லது அரசில் இருந்தோ பத்திரிக்கை குறிப்பாக (Press Communication) வெளிவராத நிலையில் இதை செய்தி ஊடகங்களுக்கு எப்படி வெளியாக்கப்பட்டது? அரசின் மிக முக்கிய இரகசிய அறிக்கை எப்படி வெளியானது? என்பது பற்றி அரசு சம்பந்தபட்டவர்கள் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமா?
இது அதிகாரப்பூர்வமான தகவல்தான் என்று தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தியாளர்களும், ஊடகங்களும் அமைச்சர் ஆ.இராசா மீது பாய்ந்து அவரை பலிகடா ஆக்க வேண்டும் என்று முயற்சிப்பதற்கு என்ன பின்னணி?
எப்படிப்பட்ட வட்டாரங்கள் இதில் மிகப்பெரிய அளவிற்கு பணச்செலவு உள்பட செய்து இதனை தொடர்ந்து செய்கிறார்கள் என்பதனை உடனடியாக ஆராய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.
சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய முயற்சிக்காமல் ராசாவைப் பற்றியே கேள்வி கேட்பதும், பதில் சொல்வதும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லவா? இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment