கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

தமிழக சட்டசபையில் 17 சட்டங்கள் நிறைவேற்றம்
தமிழ் வழியில் படித்தவர்க ளுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக் கீடு, சென்னையில் ஒருங் கிணைந்த போக்குவரத்து குழுமம் உள்பட 17 சட்டங்கள் 12.11.2010 அன்று நிறை வேற்றப்பட்டன.

சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான 12.11.2010 அன்று மொத்தம் 17 சட் டங்கள் நிறைவேற்றப் பட்டன.

அமைச்சர் நேரு தாக் கல் செய்த சட்ட மசோ தாவில், ``சென்னை பெரு நகரப் பகுதியில் போக் குவரத்து அமைப்பை திட்டமிடுதல், செயற் படுத் துதல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றில் பல ஏஜென்சிகள் ஈடு பட்டுள்ளன. இவற்றுக்கி டையே முறையான ஒருங்கிசைவும், ஒழுங்க மைப்பும் தேவைப்படு கிறது. இதற்காக ஒருங் கிணைந்த போக்குவ ரத்து குழுமம் நிறுவப்படு கிறது'' என்று கூறப்பட் டுள்ளது.

அமைச்சர் பரிதி இளம் வழுதி தாக்கல் செய்த மசோதாவில், ``திட்டப் பரப்பிடம் அல்லாத பரப்பிடங்களில் மேம் பாட்டினை முறைப் படுத்துவதற்கும், இம் மாநிலத்தில் நன்செய் நிலங்களைப் பாதுகாக்க வும், பிற பயன்பாடு களுக்கு மாற்றுவதை முறைப்படுத்துவதற்கும் தக்கவாறு சட்டம் திருத் தப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மற்றொரு மசோதாவில், ``சென் னையில் அங்கீகாரமற்ற கட்டடங்களை இடிப்ப தற்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு வகை செய் யும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் வழி யில் படிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக் கீடு செய்யும் சட்டம், வக்பு சொத்துகளை பாது காக்க சட்ட திருத்தம் போன்றவை உள்பட 17 சட்டங்கள் நிறைவேறின.

இதில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு 20 சதவிகிதம் அரசில் வேலைவாய்ப்பு என் பதை அதிகமாக்க வேண் டும் என்று கலைராஜன் (அ.தி.மு.க.), ஞானசேக ரன் (காங்கிரஸ்), ஜி.கே. மணி (பா.ம.க.), நன் மாறன் (மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட்), சிவபுண்ணி யம் (இந்திய கம்யூ னிஸ்ட்), டாக்டர் சதன் திருமலைக்குமார் (ம.தி. மு.க.), ரவிக்குமார் (விடு தலை சிறுத்தைகள்) ஆகியோர் வலியுறுத்தி னார்கள்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுரு கன், ``இந்த சட்டத்தை எல்லோரும் வரவேற்றி ருக்கிறார்கள். சிலர் வேண்டாவெறுப்புடன் வரவேற்றாலும், அது தமிழின் மீதான வெறுப் பல்ல, எங்கள் மீதான வெறுப்பு தான். தமிழ் நாட்டில், தமிழில் படித் தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க சட்டம் இயற்ற வேண்டிய நிலை யில் இருக்கிறோம் என் பது வேதனையானது தான். ஆனால் அதனை முதலமைச்சர் கலைஞர் செய்வது பெருமைக்குரி யது. இந்தச் சட்டத்தை மாற்றுகிற தைரியம் யாருக்கும் வராது.

20 சதவிகிதத்திற்கு மேல் வேண்டும் என்றார் கள். சட்டத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை பார்க்க வேண்டும். இதை தடுக்க தமிழ் எதிரிகள் சிலர் இருக்கி றார்கள். ஆனால் எதிர் காலத்தில் 50 சதவிகித மல்ல, 100 சதவிகிதம் நிச்சயம் வரும். இதில் இடஒதுக்கீடு பாதிக் காது, 20 சதவிகிதம் மட்டுமல்ல, திறமை இருந்தால் பொதுப் பட்டியலிலும் வரலாம். தமிழுக்கு இது ஓர் ஆரம்பம்தான்'' என்றார்.

No comments:

Post a Comment