கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா? மாண்புமிகுவைப் பறிக்கலாம், மானமிகுவைப் பறிக்க முடியுமா? - கி. வீரமணி


மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்கள் பதவி விலகியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


நேற்றிரவு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா பதவி விலகி னார் என்பது செய்தி.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண் டனை என்ற தத்துவப் பழமொழிக்கு தன் னேரில்லா உவமையான தகைமையாளர்.

சந்தையைப்போல் ஆக்கிய நாடாளுமன்றத்தினை நடத்திட இப்படி ஒரு கடும் விலையா, பலிகடாவா என்று பண்புள்ளங்கள் நாடெங்கும் கேட்கக்கூடும்! பக்தர்களின் பாவ மன்னிப்புக்காக கடவுள், கடவுளச்சி களின் முன் பலியிட்டு ரத்தக் காணிக்கை கொடுத்து, பூசாரிகளும் அப்பாவி பக்தர் களும் மகிழ்வதில்லையா - அதுபோன்ற டில்லிக் காட்சி ஒன்று இது!

அமைச்சர் ஆ. இராசா பின்பற்றிய நடைமுறை

1999 ஆம் ஆண்டு முதலே இருந்த நடை முறையைத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை யிலும் அமைச்சர் ஆ. இராசா பின்பற்றினார்.

கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவைத் தத்துவப்படி, அவர் மட்டும்தான் குற்றம் இழைத்தவரா - குற்றம் என்று ஒன்று நடந் திருக்குமானால் - அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடு, செயற்பாடு என்று எதிர்க்கட்சி கள் மேலும் சில காவுகளைக் கேட்க மாட் டார்களா என்ற கேள்வி, மில்லியன் டாலர் கேள்வியாகக் கிளம்பாதா?

இதுவரை உலகம் கேள்விப்படாத ஒன்று விசித்திரம்! ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன்பே, அது பற்றிய விமர்சனம், பதவி விடுவிப்பு என்றால் அதைவிட வேறு விசித்திரம் உண்டா?

பூமராங்போல திரும்பாதா?

ஷேக்ஸ்பியரின் வெனீஸ் நகரத்து வியாபாரி (கூந ஆநசஉயவே டிக ஏநஉந) நாட கத்தில், ஷைலக் கேட்ட ஒரு பவுண்ட் சதை - ரத்தம் சிந்தாமல் எடுக் கப்பட்டு தரப்படவேண் டும் என்று கேட்டபோது, புரிந்துகொண்ட நீதிபதி எவ்வாறு தீர்ப்பளித்தார்?

இங்கே...? நாளைக்கு இது எந்தக் கூட்டணிக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக பூமராங்போல திரும்ப ஒரு தவறான முன்னுதாரணமாகிவிட்டது.

தலைமைக்குக் கீழ்ப்படியும் முதல் தொண்டர் ஆ.இராசா


ஏற்கெனவே நடந்த மற்ற பதவி விலகல்கள் யூகம், கசிவு அடிப்படையில் நடைபெறவில்லை! எனவே, அவற்றை இதனுடன் ஒப்பிட முடியாது!

ஆ. இராசா தலைமைக்குக் கீழ்ப்படியும் முதல் தொண்டர்; எனவே, அவர், தான் வீழ்ந்தாலும் தனது கட்சிக்கும், தலைமைக்கும், மத்திய ஆட்சிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்கு ராஜினாமாவை வலியச் சென்று அளித்து, வான்புகழ் கொண்டுவிட்டார்!

மண்டல் ஆணையத்திற்காக வி.பி. சிங்கை - குற்றமற்றவரை பிரதமர் பதவியிலிருந்து விலக வைத்த அந்தக் கூட்டம்தான் இராசாவை நோக்கி தங்களது துப்பாக்கிகளை நீட்டிய கூட்டம் - மண்டல் ஆணையத்தின் அமலாக் கத்தைத் தடுக்க முடிந்ததா?

பதவியோடு பிறந்ததல்ல தி.மு.க.; பதவியோடு பிறந்தவரல்லர் நமது மானமிகு இராசா. தன்மானம் தழைத்தோங்க தரணியில் தந்தை பெரியாரிட மிருந்து முளைத்த பலம் குன்றா சுயமரியாதைக் கொள்கை விழுது அது!

மாண்புமிகு ஆ.இராசா மானமிகுவானார்

இதனை அரசியலால் - நாளைக்கொரு கூட்டணி, ஆளுக்கொரு வேஷம் போடுபவர் களால் வீழ்த்திவிட முடியாது.

அறத்திற்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் அளக்க முடியாததுதான். உள்ள ஆழம் கணக்கிட முடியாததுதான்!

மாண்புமிகு இராசா, மானமிகுவாகியுள்ளது பெருமையே!

மாண்புமிகுவைப் பறிக்கலாம் எவரும் - மானமிகுவை எவராலும் பறிக்கவே முடியாது - மரணம் ஒன்றைத் தவிர!

இராசா இதன்மூலம் வெற்றி வீரராகி ராஜ நடைபோட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது -

காத்திருக்கிறார்கள் கருஞ்சிறுத்தைகள்!

பதவி அரசியல் வரலாறு தெரியாதவர்கள் அல்லர் மக்கள்.

முன்பு முந்திரா ஊழலில் சிக்கிய டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் அதை விசாரித்த நீதிபதி எம்.சி. சுக்லாவும் ஒரே நேரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற (நேரு காலத்தில்) காங்கிரஸ் கலாச்சாரம்பற்றி எதிர்க் கட்சியினரின் பேச்சு நாடாளுமன்ற பழைய குறிப்புகளில் பதிவாகி உள்ளது என்பது வரலாறு.

யாருக்கு வெற்றி?

இதில் யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழலாம். போட்ட தீனிக்குப் பலன் ஏற்பட்டு விட்டது என்ற பெருமுதலாளித்துவ திமிங் கலங்கள் புன்னகை புரிகின்றனவே அவர் களுக்குத்தான்!

ஜனநாயகம் என்ற பெயரில் கூச்சல் நாடாளுமன்ற நடப்பு என்ற தன்மையில் இன் னமும் என்னென்ன கூத்துக்கள் அரங் கேறுமோ - பொறுத்திருந்து பார்ப்போமாக!

தலைவர்,

திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment