தமிழ்நாட்டைக் குடிசை யில்லா மாநிலமாக மாற்றும் குறிக்கோளோடு அடுத்த ஆறு ஆண்டுகளில் மாநிலம் முழு வதுமுள்ள 21 லட்சம் குடிசை களை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங் கும் திட்டம் செயல்படுத்தப் படுவது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட் டின் நவம்பர் 4ஆம் தேதி இதழில் வெளியிடப் பட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமி ழாக்கம் வருமாறு:
கடலூர் வட்டம், திருவந்தி புரம் ஊராட்சியைச் சேர்ந்த டி.ஆறுமுகம் என்பவருக்கு பருவமழைத் தொடக்கம், எப் போதும் அத்துடன் ஏராளமான பிரச்சினைகளையும் கொண்டு வரும்.
கடந்த ஆண்டு ஆறு பேர் கொண்ட அவரது குடும்பம், வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து வேயப்பட்ட ஓலைக் கூரையால் பாதுகாக்கப்பட்ட அவர்கள் மண் சுவர் வீட்டின் தரையில் நெருக்கடியாகப் படுத்துத் தூங்க வேண்டியிருந்தது. கட் டடத் தொழிலாளியாக வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வந்த ஆறுமுகம் மழை வெள்ளம் வடிந்து ஓலைக் கூரையை மறுபடியும் வேயக் காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது மழை பெய்யும் காலத்தில் அந்தக் குடும்பம் தங்களுடைய புதிய கான்கிரீட் வீட்டில் எந்த அச்சமுமின்றி நிம்மதியாகத் தூங்க முடிகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட் டத்தின் கீழ் பயனாளியாகத் தெரிவு செய்யப்பட்ட போது ஆறுமுகம் மகிழ்ச்சியில் உற் சாகம் அடைந்தார். தொழிலாளி களை வேலைக்கு அமர்த்தியும், கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் திரட்டியும் ஆறுமுகம் 30 நாட் களில் வீட்டைக் கட்டி முடித் தார். இது பெரிய சொத்து. இப்போது இரவு முழுவதும் என்னுடைய குடும்பம் நிம்மதி யாக உறங்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
ஏழை- எளிய மக்களுக் காக ஆளும் தி.மு.க.வின் இந்த முன்னோடித் திட்டம், ஆறு ஆண்டுகளில் மாநிலம் முழு வதுமுள்ள 21 லட்சம் குடிசை களைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி தமிழ் நாட்டைக் குடிசை யில்லா மாநில மாக்கும் நோக் கம் கொண்டது. இந்தத் திட்டம், கிராமப் புறப் பகுதி களில், குறிப்பாக மாநிலத்தி லேயே மிக அதிகமான குடிசை களைக் கொண்ட விழுப்புரம், கடலூர் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் வேகமடைந் துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள 2,10,758 குடிசைகளில் 1,26,735 குடிசைகள் தகுதி உடையவை களாகக் காணப்பட்டன. இவற் றில், முதற்கட்டத்தில் நடப்பு ஆண்டில், 26,110 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப் படுவதுடன், இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மேலும் 4,336 வீடுகளும் கட்டப்பட வுள்ளன.
மீதமுள்ளவற்றைச் செய்து முடிக்க இந்திரா வீட்டு வசதித் திட்டத்தை மட்டும் சார்ந்தி ருந்தால் மேலும் பத்து ஆண்டு களாகும். இதுவரை 21 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுவிட்டன என்றும், மேலும் 2,441 வீடுகள் கட்டி முடிக்கப்பட பல்வேறு கட்டங்களில் உள்ளனஎன்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பயனாளிகளுக்குக் குறைந்த விலைகளில சிமென்ட், இரும்புக் கம்பிகள் உள்பட கட்டுமானப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் பி.சீதா ராமன் கூறுகிறார். பயனாளி களுக்கு யூனிட் ஒன்றுக்கு (ஒரு மாட்டு வண்டி) 312 ரூபாய் விலையில் மணல் வினியோகிப் பதற்காக ஒன்பது மணல் குவாரிகளை நிருவாகம் தொடங்கியுள்ளது. தேவைக் கும், விநியோகத்திற்கும் இடையில் உள்ள இடை வெளியை நிரப்ப சாம்பல் மற்றும் சிமென்ட் செங்கற்களை உற் பத்தி செய்ய 113 சுயஉதவிக் குழுக்களை நாங்கள் நிய மித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு பற்றிக் கேட்ட தற்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள ஒரு அதிகாரி கூறிய தாவது:
பஞ்சாயத்துகள் மூல மாகப் பயனாளிகளுக்கு அரசு குறைந்த விலையில் சிமெண்ட், இரும்புக் கம்பிகளை வழங்கு கிறது. மூடை ரூ.210 விலையில 60 மூடை சிமென்டும், கிலோ 36 ரூபாய் சராசரி விலையில் இரும்புக் கம்பிகளும் அரசால் ஒவ்வொரு பயனாளிக்கும் அளிக்கப்படுகின்றன. கட்டு மானப் பொருள்களின் விலை உயர்வு இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்
No comments:
Post a Comment