கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 8, 2010

32 பேருக்கு 3.20 லட்சம் கலைஞர் வழங்கினார்


தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


’’கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்புநிதியாக போட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டது.

இதில் 30-வது புத்தகக் கண்காட்சி திறப்பு விழாவில் கருணாநிதி அறிவித்தது போல, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. அதுபோக மீதமுள்ள ரூ.4 கோடியிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.


இதுவரை வழங்கிய நிதி ரூ.1 கோடியே 79 லட்சத்து 5 ஆ
யிரம். 2010 அக்டோபர் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை நேற்று தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்பட்டது.


நிதி உதவி பெறுவோர் விவரம்:-


வடசென்னை மாவட்டம் மண்ணடி வி.இப்ராகிம், தென்சென்னை சைதாப்பேட்டை வி.புகழேந்தி, திருவள்ளூர் பொதட்டூர்பேட்டை கே.முனுசாமி, காஞ்சீபுரம் புதுபெருங்களத்தூர் டி.ராணி, வேலூர் பேரணாம்பட்டு ஜி.ஜெகன், திருவண்ணாமலை போளூர் ஏ.சி.பெருமாள், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை ஆர்.முத்தையன், கடலூர் திட்டக்குடி பி.எம்.புகழேந்தி,


தஞ்சை மதுக்கூர் சா.சோமசுந்தரம், நாகை கொள்ளிடம் கோ.க.மூர்த்தி, திருவாரூர் விஜயபுரம் ஊ.சின்னப்பிள்ளை, திருச்சி லால்குடி கே.முருகேசன், பெரம்பலூர் அ.மேட்டூர் க.ராஜலட்சுமி, அரியலூர் திருமானூர் கோ.சீனிவாசன், கரூர் வேலாயுதம்பாளையம் எஸ்.எம்.யூசுப், புதுக்கோட்டை சண்முகநாதபுரி எஸ்சோமன்,


நாமக்கல் சீராப்பள்ளி பி.கிருஷ்ணன், தர்மபுரி மாதேஅள்ளி எஸ்.நடராஜன், கிருஷ்ணகிரி ஓசூர் எம்.முகம்மது கமால், கோவை வால்பாறை எம்.பரமசிவம், திருப்பூர் குமரலிங்கம் எஸ்.வீரமுத்து, ஈரோடு நாகர்பாளையம் என்.கே.ஆறுமுகம், நீலகிரி ஜக்கனாரை கே.சாவித்திரி,


மதுரை திருப்பரங்குன்றம் எம்.வேல்காந்தி, தேனி ராஜகோபாலன்பட்டி அ.முத்துலட்சுமி, திண்டுக்கல் திருநல்லிக்கோட்டை டி.கோவிந்தராஜன், ராமநாதபுரம் பரமக்குடி என்.ஆர்.கோபி, சிவகங்கை தேவகோட்டை கா.கண்ணன், விருதுநகர் வெள்ளைக்கோடை மா.ஆவுடையப்பன், திருநெல்வேலி தேவிபட்டணம் த.பால்ச்சாமி, தூத்துக்குடி கருங்குளம் க.காளிநாதன், கன்னியாகுமரி மாத்திவிளைவீடு ஆர்.சுந்தரம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment