மத்திய அமைச்சரும், திமுகவின் தென்மாவட்ட அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியின் மகன் தயாநிதிஅழகிரி திருமணம் 18.11.2010 அன்று நடைபெறுகிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கும், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் அழகிரி நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் 04.11.2010 அன்று மதுரை சென்றார்.
மு.க.அழகிரி வீட்டிற்கு சென்று திருமண ஏற்பாடு குறித்த விபரங்களில் பங்கு கொண்டனர். திருமணம் ஆலோசனையின் போது ஸ்டாலின் பல ஆலோசனைகள் சொன்னதும் அழகிரி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
பின்னர் திருமணம் நடைபெறும் தமுக்கம் மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். வீடு திரும்பியதும் ஸ்டாலினுக்கும், செல்விக்கும் காந்தி அழகிரி மதிய உணவு வைத்து அசத்தினார்.
விருந்தில் அது நல்லாயிருக்கு இது நல்லாயிருக்கு என்று கேட்டு கேட்டு ஸ்டாலின் சாப்பிட்டதால் அழகிரி குடும்பத்தார் மட்டுமல்லாது அழகிரி ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருந்து முடிந்ததும் ஸ்டாலினும், செல்வியும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
No comments:
Post a Comment