இலங்கையில் முகாம் களில் தங்கவைக்கப்பட் டுள்ள தமிழர்கள், அங்கி ருந்து விரைவில் வெளி யேறுவதற்காக, இலங்கை அரசிடம் மத்திய அரசு பேசி வருகிறது என முத லமைச்சர் கலைஞருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இலங்கையில் முகாம் களில் தங்கவைக்கப்பட் டுள்ள தமிழர்களின் மறு குடியமர்வு மற்றும் புனர் வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசினை, தமிழக முதலமைச்சர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த மாதம் 9ஆம் தேதியன்று தமிழ் நாட்டிற்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வந்தபோது, சென்னை விமான நிலை யத்தில் அவரை முதலமைச் சர் கலைஞர் சந்தித்தார்.
அப்போது, அவரி டம் ஒரு மனுவை கலை ஞர் அளித்தார். அதில், ``எவ்வளவு விரைவில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்து அவரவர் சொந்த இடங் களுக்கு திரும்பிச்செல்ல அனுமதிக்கப் படுகிறார் களோ, அவ்வளவு விரை வில் அவர்கள் தங்களது மாமூல் வாழ்க்கையை நடத்த இயலும். எனவே முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந் தார். அது தொடர்பாக சோனியாவுக்குக் கடி தமும் எழுதியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞ ருக்கு, அகில இந்திய காங் கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் கலை ஞருக்கு, சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதா வது:-
30 ஆயிரம் தமிழர்களை...!
இலங்கையில் உள்ள முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ள 30 ஆயிரம் இலங்கை தமிழ் மக் களை மறுகுடியமர்வு செய்தல் தொடர்பாக தாங்கள் எனக்கு கடந்த அக்டோபர் 8ஆம் தேதி எழுதிய கடிதம் கிடைத் தது. இந்த பிரச்சினை யில் உங்களுக்கு இருக் கும் அதே வருத்தம் எனக்கும் உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மறுகுடி யமர்வுக்கு தேவைப்படும் உதவிகளையும், மனிதாபி மான அடிப்படையி லான உதவிகளையும் இயன்ற அளவுக்கு நமது மத்திய அரசாங்கம் அளித்து வருவதை நான் அறிவேன். இலங்கை முகாம்களில் உள்ள தமிழ்நாட்டு மக்களின் இடர்களை தீர்ப்பதற் கும், அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் மத்திய அரசு தேவையான நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர, இலங்கை முகாம்களில் உள்ள தமி ழர்களின் மறுகுடிய மர்வு, புனர்வாழ்வு மற் றும் மறுகட்டமைப்பு பணிகள் தொடர்பாக, இலங்கை அரசின், உரிய அதிகாரிகள் அளவில் இந்திய அரசு பேசி வருகிறது. இதன் மூலம், முகாம்களில் இருந்து தமிழ் மக்கள் விரைவில் வெளியேற முடியும்.
- இவ்வாறு அதில் சோனியா காந்தி குறிப் பிட்டுள்ளார்
No comments:
Post a Comment