சீதையைப்பற்றி கம்பர் கூறும்போது, ஒரு கவியிலே சீதை மனத்தாலும் வாக்காலும் குற்றம் செய்திலள் என்று கூறுகிறார். காயத்தை விட்டுவிடுகிறார். ஏன்? காயம் (உடல்) கெட்டு விட்டது என்ற பொருள் தொக்கி நிற்கவில்லையா? இவ்வளவு முக்கியமான பிரச்சினை யிலே அவர் தவறுதலாகவோ, மறந்தோ, காயத்தைப் பற்றிக் கூறாமல் விட்டிருப்பாரா என்று கேட்டால் கோபித்துப் பயன் என்ன?
பதில் கூறித்தானே ஆகவேண் டும்? கவி தவறிழைத்தான் என்று கூறுங்கள், ஜானகியைக் காப்பாற்ற வேண்டுமானால்! கம்பனையா குறை சொல்வது என்று தோன்றினால், ஜானகியைக் கைவிடுங்கள்! இரண்டும் இஷ்டமில்லை என்றால், சிதம்பரநாத ரிடம் சொல்லிப் பாடலை ரிப்பேர் ஷாப்புக்கு அனுப்பி வையுங்கள். உள்ளதை நாங்கள் சொல்லும்போது எங்கள் மீது கோபித்து என்ன பயன்?
- அறிஞர் அண்ணா
மறுமலர்ச்சி பக்கம் - 17
No comments:
Post a Comment