கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா : பிரதமரிடம் கடிதம் கொடுத்தார்


ஸ்பெக்டரம் பிரச்னை தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா நேற்றிரவு ராஜினாமா செய்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
ஜி&2 ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்னையால் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் இன்று முதல் தீவிர மாக கிளப்பி, அவை அலுவல்களை முடக்க அவை திட்டமிட்டு உள்ளன.
இந்த பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆ.ராசா சந்தித்துப் பேசினார். பின்னர், நேற்றிரவு டெல்லிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி, ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1999ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை எந்த முறையைப் பின்பற்றி ஜி&2 ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டை செய்து வந்ததோ, அதே முறையைப் பின்பற்றிய ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றன.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1999ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை எந்த முறையைப் பின்பற்றி ஜி&2 ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டை செய்து வந்ததோ, அதே முறையைப் பின்பற்றிய ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றன.
நாடாளுமன்ற ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகளில் விவாதித்து முடிவு எடுக்கவும் வழி வகுக்கும் வகையில், ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்றிரவே விலகிக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. முடிவு எடுத்து. அவருக்கு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் விரிவான அறிக்கை தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தப் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-

" எனது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எனது தலைவரின் அறிவுரை யின்படி நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். மத்திய அர சுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படாமல் இருப் பதற்காகவும், நாடாளு மன்றத்தில் அமைதியும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கும் பத வியை நான் ராஜினாமா செய்து இருக்கிறேன்.

நான் பதவி விலகி இருப்பதால் என் மீதான புகாரை ஒப்புக்கொள்வ தாக அர்த்தம் இல்லை. நான் ஏற்கெனவே நாடா ளுமன்றத்திலும் வெளி யிலும் கூறியது போல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் என்மீது எந்தத் தவ றும் இல்லை. எல்லாமே சட்டப்படிதான் நடந்து உள்ளது. அதை நான் உரிய முறையில் நிரூபிப் பேன். அதே நேரத்தில், நான் இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பின் பெரிய அள வில் சாதனை செய்திருப் பதை மக்களுக்குத் தெரி விக்க விரும்புகிறேன்.

தகவல் தொடர்புத் துறையில் ஒரு புரட்சிக்கு நான் காரணமாக இருந் துள்ளேன். நான் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு நாடு முழுவதும் 30 கோடி டெலிபோன் இணைப்பு கள்தான் இருந்தன. நான் இத் துறையின் அமைச் சராகப் பொறுப்பேற்ற பின்னர், தற்போது எனது முயற்சியின் காரணமாக அது 70 கோடியே 20 லட்சமாக அதிகரித்து உள்ளது. அதேபோல் முதலில் நிமிடத்திற்கு 1.50 காசாக இருந்த டெலி போன் கட்டணம் தற்போது 40 காசாக குறைந்து இருக்கிறது. அதற்கு எனது முயற்சியே முக்கியக் காரணமாகும். நான் எனது மன சாட்சிப்படி இந்த நிமிடம் வரை நேர் மையாக நடந்துள்ளேன் "

இவ்வாறு ஆ.இராசா கூறினார்.

No comments:

Post a Comment