தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் பை ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் 11.11.2010 அன்று அறிவித்தார்.
சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் கருணாநிதி 11.11.2010 அன்று அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
தமிழ் புத்தாண்டு தினமான தைத் திங்கள் முதல் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சர்க்கரை பொங்கலிட்டு புத்தாண்டு திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 2009ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பரிசாக பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்க உத்தரவிடப்பட்டது. ஏறத்தாழ 70 கோடி ரூபாய் செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல வரும் 2011ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடவிருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும்
மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலமாக 2011 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழ் புத்தாண்டு பரிசாக சர்க்கரை பொங்கலுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த அறிவிப்பினை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கடந்த மாதத்துடன் எடுத்த கணக்கு எடுப்பின்படி 1 கோடியே 93 லட்சம் ரேஷன்தாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கு பொங்கல் பை வழங்கப் படும்
என்ற அறிவிப்பினை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு அதில் முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment