அதிமுகவினர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாது என்று பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 12.11.2010 அன்று துணை பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு அன்பழகன் அளித்த பதில்:
தொழிலாளர்களின் நலனை பற்றி வேறு கருத்து அரசுக்கு உள்ளது போன்று சிலர் பேசினார்கள். உழைப்பை மதிப்பதுதான் திராவிடர் கொள்கை. மூட்டை தூக்குவது கேவலம் அல்ல என்று பெரியார் சொன்னார். தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசு என்றும் நடக்காது. திமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை போடுகிறது. இது யாருக்கு போகிறது? ஏழை மற்றும் தொழிலாளர்களுக்குத்தான் போகிறது. அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுகிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். சில குறைபாடுகள் வரத்தான் செய்யும். இதையும் கண்டுபிடித்து திருத்துவோம்.
விலைவாசி ஏற்றத்தை வரவேற்கவில்லை. ஆனால் யாரும் விலைவாசி உயர்வை தடுத்துவிட முடியாது. ஒரு பொருளை நான்கு பேர் கேட்டால் விலை ஏறும். தேவை இருக்கும்போது விலை ஏறத்தான் செய்யும். இப்போது தேவை அதிகம். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் காட்டும் வகையில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இந்த அரிசிதான் கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு பயன்பெறும்.
அரிசி மட்டும் குறைந்த விலையில் கொடுக்கிறீர்கள். மற்ற பொருட்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சி குறை கூறினார்கள். உடனே மற்ற சமையல் பொருட்கள் அடங்கிய பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. இதெல்லாம் பணக்காரர்களுக்காகவா? ஏழைகள் பயன்பெறத்தான் வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் இலவசம் என்று கூறி மக்கள் உழைப்பின் ஆர்வத்தை குறைத்துவிடக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு கட்சிக்கு, அல்லது ஒரு சிலருக்கு கொடுத்தால் தவறு. ரேஷன் அட்டை வைத்துள்ள எல்லா கட்சிக்காரர்களுக்கும்தான் டி.வி. இலவசமாக கொடுக்கிறோம். இலவச டி.வி. கொடுப்பதால் அரசுக்கு நஷ்டம், மக்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டனர். டி.வி. வழங்குவதை லஞ்சமாக கருத முடியாது, ஏழைகளின் அறிவு வளர்ச்சிக்கு டி.வி. தேவை. டி.வி.யை இனியும் பொழுதுபோக்கு பொருளாக கருத முடியாது. வளர்ச்சி பாதையில் உள்ள தடைகளை நீக்குவது அரசின் கடமை. இலவச டி.வி. தேவையில்லை என்று கூற முடியாது என்று தீர்ப்பு கூறப்பட்டது.
இலவசங்கள் எல்லாம் தவறு என்றால் மக்கள் கொடுத்த வரிதான் அரசு நிதி. அரசே பொதுமக்கள் அரசு. மக்கள் தந்த வரியை பொதுமக்களுக்கு வழங்குவதை தவறாக கருதக் கூடாது. ஜனநாயகத்தின் தேவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாம் இலவசம் என்றால் கார் கொடுக்க முடியுமா? என்று கேட்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட இலவசமாக கார் தர முடியாது. இலவசத்துக்கும் ஒரு அளவு உண்டு.
போக்குவரத்து எவ் வளவுக்கெவ்வளவு அதிகமோ அந்த அள விற்கு விபத்துகள் அதி கம். 10 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு மோட்டார் வாகனங் கள் நாட்டில் பயன் படுத்தப்பட்டனவோ, அதைப் போல் இப் போது 4 மடங்கு வாக னங்கள் பயன்படுத் தப்படுகின்றன.
விபத்துகள் ஏற் படாதா? அப்போது கோயிலுக்குப் போகிற வர்கள் ரயிலில் போய் விட்டு மெதுவாகத் திரும்பி வருவார்கள். இப்போது இரவு காரில் புறப்பட்டு கோயிலுக்குச் சென்று விட்டு மறுபடியும் காரில் திரும்பி வருகி றார்கள். விபத்து ஏற் படுகிறது.அந்த ஆண்டவனால் கூட அவர்களைக் காப் பாற்ற முடிவதில்லை. ஆனால், இதற்கு என்ன காரணம் என்று கேட் டால், போக்குவரத்து நெருக்கடி நாட்டில் வளர்வதுதான் கார ணம்.
இதற்கான காரணம் மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பக்கம், பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம், வாகன வசதிகள் ஒரு பக்கம், அறிவியல் பெருக் கம் ஒரு பக்கம், செய்தி கள் பரிமாற்றம் ஒரு பக்கம். ஆகவே, இந்த வளர்ச்சிகளுக்கிடையில் ஏற்கெனவே குற்றங் களின் எண்ணிக்கை பெருகியதுதான் கண் ணுக்குத் தெரியும்
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இரண்டரை லட்சம் பேருக்கு ஸீ500 கோடிக்கு மேல் செலவு செய்து இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதுபோன்ற நல்ல திட்டங்களை குறை சொல்கிறவர்களுக்கு இந்த ஆட்சியின் மீது கோபமே தவிர திட்டத்தின் மீது இல்லை. சொல்லப்போனால் அதிமுகவினரே அரசின் நலத் திட்டங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதிமுகவினர் யாரும் கர்ப்பம் அடைவதில்லையா? கர்ப்பிணி பெண்கள் நலத் திட்டத்தில் உதவி பெறவில்லையா? அதிமுகவினரின் குழந்தைகள் யாரும் பள்ளியில் வாழைப்பழம் சாப்பிடவில்லையா? அதிமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் எல்லா ஆசையும் நிறைவேறாது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்
No comments:
Post a Comment