கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

தலைவர்கள் - பிரமுகர்கள் வாழ்த்து







திருமண விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதியுடன் எல்லா களத்திலும் துணை நிற்போம். மரத்தில் வைரம் பாய்வது போல, முதுமை ஆக ஆக அவர் பலம் பெற்று வருகிறார். எத்தனை எத்தனை அஸ்திரத்தை ஏவினாலும் அனைத்தையும் சந்திக்கும் திறமை உள்ளவர் கருணாநிதி. அவர் 6வது முறையாக முதல்வராக வேண்டும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உரு வானது. ஆனால் அஞ்சாநெஞ்சனுக்கு அஞ்சியோ என்னவோ, அந்த தாழ்வு மையம் இன்று அரபிக்கடலுக்கு இடம்பெயர்ந்து விட்டது. மணமக்கள் தாத்தா, பாட்டி, சித்தப்பாவை போல பெருமையும், பொறுமையும் பெற்று வாழ வேண்டும்” என்றார்.
சிதம்பரம் பேச்சு: விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் எங்கள் அரசியல் கூட்டணியின் தலைவர் கருணாநிதி. அழகிரியின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், நானும் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திருமணவரவேற்பு நிகழ்ச்சியை டிவியில் பார்த்து வரமுடியவில்லையே என நினைத்தேன். ஏனெனில் வரவேற்பில் அழகிரி பாட்டுப்பாடியது அமர்க்களமாக இருந்தது. மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்து கிறேன், என்றார்.

பிரதமர் மன்மோகன், சோனியா வாழ்த்து
மு.க.அழகிரி மகன் திருமணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். இதை திருமண மேடையில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வாசித்தார். அப்போது பலத்த கைதட்டல் எழுந்தது. அந்த வாழ்த்துச் செய்தியில், அலுவல் பணி காரணமாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. இருந்தபோதும் மணமக்கள் துரைதயாநிதி &அனுஷா தம்பதிக்கு எங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், என குறிப்பிட்டிருந்தனர்.
மணமக்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பேராயர் சற்குணம், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உட்பட பலர் வாழ்த் தினர்.

No comments:

Post a Comment