கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 14, 2010

குழந்தைகளை கடத்தினால் கடும் நடவடிக்கை - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்


பள்ளி குழந்தைகளை கடத்துவோர் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கோவை சம்பவம் தொடர்பாக சட்ட பேரவையில் 10.11.2010 அன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வேலு சாமி (அதிமுக), கோவை தங்கம் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), பால பாரதி (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். பதிலளித்து துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதா வது:
சட்டம் & ஒழுங்கை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதால் தமிழகத்தில் பெரிய அளவில் பிரச்னை இன்றி அமைதி காக்கப்படுகிறது.
ஆங்காங்கே நடந்த கடத்தல் சம்பவங்களில் காவல் துறை வேகமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து கடத்தப்பட்டவர்களை மீட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட பிரச்னையால் வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் குறித்து பத்திரிகையில் வரும்போது கடத்தல் போன்ற தவறான தோற்றம் மக்களிடையே ஏற்படுகிறது.
பணய தொகை கேட்டு சிறுவர் கடத்தப்பட்ட சம்பவங்கள் மிகமிக குறைவு. சென்னையில் ஜூன் 2009 முதல் இதுவரை 45 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 2 மட்டுமே அத்தகைய கடத்தல் கள். 32 வழக்கு காதல் விவகாரம், 2 சொத்து பிரச்னை , ஒன்று தொழில் போட்டி, 8 குடும்ப அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பானது. 2006 முதல் இந்த செப்டம்பர் 201 கடத்தல் வழக்கு பதிவானது. அனைத்திலும் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்து, கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
முகப்பேர் மாணவன் கீர்த்திவாசன் கடத்தலில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் எதிரிகள் இருந்ததால் அசம்பாவிதம் ஏற்படாமல் பணய தொகை கொடுத்து மீட்கும் யுக்தியை கடைபிடித்தனர். மாணவனை மீட்ட சில மணி நேரத்தில் குற்றவாளி களை கைது செய்து, தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.
1993ல் அடையாறு காந்தி நகரில் மாணவன் ஸ்ரீராம் கடத்தப்பட்ட வழக்கில், அவன் தந்தை ரூ.5 லட்சம் கொடுத்தும் ஸ்ரீராம் உயிருடன் மீட்கப்படவில்லை.
கோவையில் முஸ்கான், ரித்திக் ஆகியோர் பள்ளிக்கு சென்றபோது கடத்தப்பட்டனர். இரண்டே முக் கால் மணி நேரத்துக்கு பின்பே காவல் நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விசாரணையில் டாக்சி டிரைவர் மோகன்ராஜ் கடத்தியது தெரிய வந்தது. அன்றைய தினமே அவனை கைது செய் தனர்.
சம்பவ இடத்தை பற்றி அறிந்து சாட்சியங்களை சேகரிக்க மோகன்ராஜையும் மனோகரனையும் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றபோது உதவி ஆய்வாளர் ஜோதி வைத்திருந்த கைத்துப்பாக்கியை மோகன்ராஜ் திடீரென பறித்து டிரைவரை மிரட்டினான். மறுத்தபோது காவலர்களை சுட்டு தப்பிக்க முயற்சித்துள்ளான்.
உதவி ஆய்வாளர் முத்துமாலை தற்காப்புக்காக குற்றவாளியை சுட்டார். ஆய்வாளர் அண்ணாதுரையும் சுட்டார். மோகன்ராஜ் காயம் பட்டு விழுந்தான். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், மோகன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மனோகரன் காவல் பாதுகாப்பில் இருக்கிறான். இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடக்கிறது.
அனைத்து பள்ளிகளிலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணி களை அதிகப்படுத்தியுள்ளனர். பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் ரோந்து வருகின்றனர். பள்ளி நிர்வாகங்களை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோரோடு பேசவேண்டுமென்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் வாகனங்களின் டிரை வர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்க வேண்டுமென்றும், மாலையில் வாசலில் ஆசிரியர்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியுள் ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், சில சமயங்களில் அந்த குற்றங் களை முழுவதுமாக தடுக்க இயலாமல் போய்விடு கிறது. இருப்பினும், தேவையான நடவடிக்கைகளை எவ்வித தயவுதாட்சண்யமின்றி எடுக்க காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி னார்.

No comments:

Post a Comment