கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 30, 2010

மழைக்கு பலியான 103 பேர் குடும்பங்களுக்கு தலா ஸி2 லட்சம் உதவித்தொகை


தமிழகத்தில் மழை காரணமாக உயிரிழந்த 103 பேர் குடும்பங்களுக்கு தலா ஸி2 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாளாக, வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களிலும் கடுமையாக பெய்து வருகிறது. இதனால், 103 பேர் இறந்துள்ளனர். பல பகுதிகளில் விவசாய பயிர்கள் , நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், குடிசைகள் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கம் முதல் வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நிவாரணப் பணிகள் பற்றி முதல்வர் இன்று 2ம் நாளாக ஆய்வு செய்தார். மழையினால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ராமநாதபுரம், ஈரோடு, மதுரை, கடலூரில் பாதிக்கப்பட்ட 301 குடும்பங்கள் மற்றும் 6787 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தினமும் 10 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம், குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மழையினால் முழுமையாக சேதமடைந்த 1254 குடிசைகள், வீடுகளுக்கு தலா ஸி2000 வீதம் ஸி25 லட்சத்து 8 ஆயிரமும், இறந்த 335 கால்நடைகளுக்கு முதல் கட்டமாக ஸி3 லட்சமும் மழையினால் உயிரிழந்த 103 பேர் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஸி1 லட்சமும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஸி1 லட்சமும் ஆக ஸி2 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மதுரை, விழுப்புரம், தர்மபுரி, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மழை நீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment