கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்னையை தீர்க்க தயார் - முதல்வர் கருணாநிதி


காவிரி பிரச்னை தீர எதிர்க் கட்சிகள் ஒத்துழைத்தால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவு ஏற்க தயார் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டப் பேரவையில் 12.11.2010 அன்று துணை நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) பேசியதாவது:
காவிரி பிரச்னையில் இந்த அரசு கையாளும் நடைமுறை வருத்தம் அளிக்கிறது. கிடைத்த தீர்ப்பை உறுதி செய்ய மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், தீர்ப்பின்படி கிடைக்கும் தண்ணீர் போதாது என்று உச்சநீதிமன்றம் செல்லுமாறும் ஜெயலலிதா கூறினார். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினீர்கள். இப்போது கர்நாடக அரசு, நீதிமன்றம் சென்றதும் நீங்களும் போயிருக்கிறீர்கள்.
கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததும் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்றார். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறிய பிறகும் கேரள அரசு அதை ஏற்க மறுத்தது. நீர்மட்டத்தை உயர்த்த ஜெயலலிதா அனுமதி பெற்றுத் தந்தார். கேரள அரசு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து ஜெயலலிதா 2006 மார்ச்சில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீங்கள் துரிதப்படுத்தவில்லை.
அமைச்சர் துரை முருகன்:
வழக்குக்கு நீங்கள் நம்பர்கூட வாங்கவில்லை. நம்பர் வாங்கி வாதாடி வெற்றி பெற்றவர்கள் நாங்கள்.
ஓ.பன்னீர்செல்வம்:
அதற்குள் தேர்தல் வந்ததால் எங்களால் அதை செய்ய முடியவில்லை. காவிரி தீர்ப்பை ஜெயலலிதா உறுதி செய்து தந்தார்.
அமைச்சர் துரைமுருகன்:
இறுதி தீர்ப்பு வந்ததும் நடந்த கூட்டத்துக்கு நீங்கள் வந்தீர்கள். டிரிபியூனல் செல்லலாம் என்று நாங்கள் கூறினோம். நீங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றீர்கள். உச்ச நீதிமன்றம் சென்றதால் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வாருங்கள் என்று டிரிபியூனலில் கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. துர்போதனை செய்தது நீங்கள் தான். ஒரே வழக்கு 2 இடத்திலும் இருக்கிறது. அம்மா சொல்படி நீங்கள் ஆடலாம். மத்திய அரசு ஆடாது. நாங்களும் ஆட மாட்டோம்.
முதல்வர் கருணாநிதி:
காவிரி பிரச்னை 67, 68ல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. நம் விவாதமும் தீரவில்லை. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் நிலை உள்ளது. நேற்று இங்கே உறுப்பினர் ஒருவர் பேசும்போது, இரண்டு கட்சிகளும் குற்றம் சாட்டுவதில் பொழுதுபோக்குவதை தவிர பிரச்னையை தீர்ப்பதில் ஒன்றாக கலந்து முடிவு செய்யவில்லை என்றார். நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அவரது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று எனக்கு ஒப்புதல் தருவாரேயானால் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் ஏட்டிக்கு போட்டியாக பேசி, அது கர்நாடக அரசுக்கு புதுத்தெம்பை உருவாக்குவதற்கு மாறாக, நாம் ஒன்றாக உட்கார்ந்து அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் பேசி ஒரு முடிவு எடுப்பது நல்லதாக இருக்கும். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் தயாராக இருந்தால் காவிரி பிரச்னை தீர்ந்த மாதிரிதான்.
சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் பேசுவோம். தேவைப்பட்டால் வெளியே உள்ள தலைவர்களையும் அழைப்போம். இரு சாராரும் சிந்திப்போம். அதைப் பற்றி விவாதிப்போம். இறுதியாக எடுக்கும் முடிவின்படி அரசு கடமையாற்றும்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.):
யார் குற்றவாளி என்று விவாதிப்பதால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்காது.
ஓ.பன்னீர்செல்வம்:
தமிழக நலனை காப்பதில் முன்நிற்பவர் ஜெயலலிதா.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
முதல்வர் தெளிவான அறைகூவல் விடுத்துள்ளார். எல்லோரும் பேசி முடிவு எடுப்போம் என்று கூறியிருக்கிறார். எல்லோரும் வேறுபாடு மறந்து தமிழக நலனில் ஒன்றாக இருந்து ஒரே குரலில் ஒரே தலைமையில் பேச நாங்கள் தயார்? நீங்கள் தயாரா?
ஜி.கே. மணி (பா.ம.க.):
கர்நாடகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிய போதும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று ஒரே குரலில் கூறினார்கள்.
அதே போல நாம் முதல்வர் தலைமையில் ஒன்றாக இருந்து ஒரே குரலை ஒலிக்க வேண்டும்.
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
காவிரி பிரச்னை தீர்க்கப்பட அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
ரவிகுமார் (விடுதலை சிறுத்தைகள்):
கட்சி பாகுபாடு பாராமல் முதல்வர் அறைகூவலை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும்.
முதல்வர்:
நான் அறைகூவல் விடுக்கவில்லை. அழைப்பு தான் விடுத்தேன்.
பன்னீர்செல்வம்:
இதில் சில நியாயம் இருக்கிறது. கூட்டணி கட்சி என்பதற்காக எதையும் பேசுவது சரியல்ல. யார் செயல்பாடு சரி என்பதில் பிரச்னை இல்லை. ஆளும் கட்சி செய்ய வேண்டிய கடமை என்ன என்று நான் கூறினேன். அதை திசை திருப்புகிறார்கள்.
முதல்வர்:
உட்கார்ந்து பேசுவோம். இங்கு அல்ல. சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் பேசுவோம். தேவைப்பட்டால் வெளியே உள்ள தலைவர்களையும் அழைப்போம். நீங்கள் கூறும் யோசனைகள் வெற்றி பெறுமா, நிறைவேறுமா என்பதை இருசாராரும் சிந்திப்போம். விவாதிப்போம். இறுதியாக எடுக்கும் முடிவின்படி அரசு தனது கடமையை ஆற்றும்.
பன்னீர்செல்வம்:
அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்று இருக்கிறோம். முழு ஒத்துழைப்பு தருகிறோம். எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கிறது.
பீட்டர் அல்போன்ஸ்:
உள்நோக்கம் கற்பிப்பது போல பேசக் கூடாது. தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க சென்ற போது நீங்கள் இடம் பெற்றீர்களா? கர்நாடகத்தில் அனைவரும் முதல்வர் பின் அணி வகுக்கிறார்கள். அந்த ஒற்றுமை இங்கே இல்லை.
(அப்போது வேல்முருகன் (பா.ம.க.) எழுந்தார். உடனே பன்னீர்செல்வம் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. அதற்குள் பேசுகிறீர்களே என்றார்)
பன்னீர்செல்வம்:
நீங்கள் ஏன் காரியம் சாதிக்கவில்லை. கால தாமதத்திற்கு நாங்களா காரணம்.
அமைச்சர் பொன்முடி:
அரசு செய்ய வேண்டியதை செய்கிறது.
பன்னீர்செல்வம்:
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையில் நம் உரிமையை நிலைநிறுத்தி நடவடிக்கையை துரிதப்படுத்தி நியாயமான உரிமைகளை பெற்றுத் தர வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை உங்களால் தடுக்க முடியவில்லை.
அமைச்சர் கே.பி.பி. சாமி:
அ.தி.மு.க. ஆட்சியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 மாதம் சிறையில் இருந்தார்கள். இந்த ஆட்சியில் 10 நாட்களுக்குள் தமிழகம் திரும்பி விடுகிறார்கள். நள்ளிரவு கூட முதல்வர் தலையிட்டு 97 மீனவர்களை உடனே விடுவித்தது வரலாறு.
பன்னீர்செல்வம்:
இலங்கை தமிழர் பிரச்னையில் நீங்கள் நினைத்திருந்தால் தமிழர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு ள்ள நிலை வந்திருக்காது.
முதல்வர்:
துணை தலைவர் கரிசனம் என் மனதை உலுக்குகிறது. யுத்தம் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று ஒலித்த குரல் யாருடையது என்பதை மறந்திருக்க மாட்டார்.
பன்னீர்செல்வம்:
போலி மருந்து, போலி மார்க்ஷீட், போலி காவல் நிலையம் என்று போலிகள் பெருகி விட்டன. போலி மருந்து தயாரிப்பு வழக்கு என்ன ஆனது. பள்ளி கட்டண நிர்ணயம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.ஜி.பி. பணி நியமனத்தில் தவறு நடந்ததாக நீதிமன்றமே தெரிவித்தது. இலவச டி.வி.க்கள் வெடிக்கின்றன.
அமைச்சர் ஐ.பெரியசாமி:
ஒரு கோடி டி.வி. தரப்பட்டுள்ளது. எங்கே வெடித்தது? உங்கள் ஆட்சியில் டி.வி ஊழல் நடந்து நாடே சிரித்தது.
பன்னீர்செல்வம்:
டி.எல்.எப். நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஸீ148 கோடி இழப்பு ஏற்பட்டதை தணிக்கை அதிகாரி கூறினார். உண்மையில் அரசுக்கு இழப்பு ஸீ738 கோடி.
துணை முதல்வர் ஸ்டாலின்:
இது பற்றி நான் விளக்கம் அளித்துள்ளேன். மேலும் விளக்கம் வேண்டும் என்றால் பதில் தர தயார். அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் இன்றி நிலம் தரப்பட்டது. இந்த ஆட்சியில் டெண்டர் விட்டு முறையாக வழங்கப்பட்டது.
பன்னீர்செல்வம்:
என்னிடம் இப்போது புள்ளி விவரம் இல்லை.
ஸ்டாலின்:
புள்ளிவிவரம் இல்லை என்றால் பேசக் கூடாது. ஆதாரம் இருந்தால் பேசுங்கள்.
பன்னீர்செல்வம்:
ஜெயலலிதா மதுரை வருவதை தடுக்க மிரட்டல் கடிதங்கள் வந்தன. 14 கடிதங்கள் வந்தும் நடவடிக்கை இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:
ஏன் ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. திட்டமிட்டு கூட்டம் சேர்க்க அதிமுக வினர் எழுதிய கடிதங்கள் அவை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
திறப்பதும் திறக்காததும்...
இந்த விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசிய சில கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அது தொடர்பாக நடந்த சுவாரஸ்யமான விவாதம்:
பன்னீர்செல்வம்:
நான் செய்தியை சொன்னேன்.
முதல்வர் கருணாநிதி:
செய்தியை சொல்வதானால் பெங்களூர் வழக்கிலிருந்து போகலாம்.
நிதியமைச்சர் அன்பழகன்:
அங்கே விண்ணப்பம் போட்டு பார்த்து, டெல்லி மறுத்து கதவு சாத்தப்பட்டதால் இங்கே வந்து கேட்பதாக நான் கருதுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்:
மூடிய கதவு உரிய நேரத்தில் திறக்கும்.
முதல்வர்:
திறப்பதும், திறக்காததும் எங்களுக்குத்தான் தெரியும்.

No comments:

Post a Comment