முதல் வர் கலைஞர் தலைமை யில் 08.11.2010 அன்று அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் கலை ஞர் தலைமையில் - புதிய தலைமைச் செயலக -சட்டப் பேரவை வளா கத்தில் மிகுந்த பொலி வோடு அமைக்கப்பட் டுள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் - நடை பெற்ற 49 ஆவது அமைச் சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில்; தமிழக அமைச்சர்களின் சார் பில் சட்டத்துறை அமைச்சர் துரைமுரு கன் அவர்கள், வரலாற் றுச் சிறப்புமிக்க புதிய சட்டப்பேரவை வளா கத்தை உருவாக்கி; அதில் அமைச்சர்களாக இருந்து பணியாற்றிட வும் - எழில் ததும்பும் அமைச்சரவைக் கூட்ட அரங்கில் அமர்ந்து கலந்து கொள்ளவுமான வாய்ப் பினை வழங்கி; அதன் மூலம் வரலாற் றில் அமைச்சர்கள் அனை வருக்கும் இடமளித்த வர் முதலமைச்சர் கலை ஞர்தான் என்பதை எண் ணும்போது நெஞ்சம் இனிக்கிறது; கண்கள் பனிக்கின்றன
- என்று உணர்ச்சி பொங்க ஆற்றிய நன்றியு ரையை அமைச்சர்கள் அனைவரும் ஒருமன தாகக் கையொலியெ ழுப்பி வரவேற்று மகிழ்ந் தனர்.
பின்னர், அமைச்சர வைக்கான பொருள்கள் நிரல்படி விவாதிக்கப் பட்டு, முடிவுகள் பின் வருமாறு மேற்கொள் ளப்பட்டன: டான்சியின் துணை நிறுவனமான செஸ்காட் (ளுவயவந நுபேநேநசபே யனே ளுநசஎஉபே ஊடிஅயீயலே டிக கூயஅடையேனர) நிறுவனத்தை 8.6.2000 அன்று எடுக் கப்பட்ட முடிவினை யொட்டி; டான்சி யோடு ஒருங்கிணைக்கும் திட்டம் பொதுநலத்தின் அடிப்படையில் அமைந் துள்ளது என்பதால், அதனை ஏற்றுக் கொள் வதென முடிவு செய்யப் பட்டது. தமிழ்நாடு கூட் டுறவு சர்க்கரை இணை யத்தின் அலுவலகக் கட் டடம் கட்டுவதற்காக, டான்சிக்குச் சொந்த மான நிலத்தை வாங்கி யதற்கு, முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத் திட வேண்டுமென்ற கோரிக்கையினை ஏற் பதென முடிவு செய்யப் பட்டது. கிருட்டிண கிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வட்டத் தில், ஆனேகொள்ளு கிராமத்தில்; பேஸ் நிறு வனம் - வாகனங்களுக் கான மின்கலங்களை உற் பத்தி செய்யும் தொழிற் சாலையை 350 கோடி ரூபாய் செலவிலும், 400 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் வகை யிலும் அமைத்திட உள் ளதால்; அந்தத் தொழிற் சாலைக்கு வழக்கமாக வழங்கப்பட்டுவரும் தொகுப்புச் சலுகை களை வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி களில் மாணவ மாண வியர் சேருவதற்கு, அவர் கள் 12ஆம் வகுப்பில் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகுதி மதிப் பெண்கள் பொதுப் பிரிவினருக்கு 50 விழுக் காடு என்றும், பிற்படுத் தப்பட்ட வகுப்பின ருக்கு 45 விழுக்காடு என் றும், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 விழுக் காடு என்றும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலை வாழ்ப் பழங்குடியின ருக்கு 35 விழுக்காடு என்றும், ஏற்கனவே 2010-2011-ஆம் கல்வி யாண்டு முதல் நிர்ணயம் செய்து, அரசாணை வெளியிட்டதற்கு, பின் னேற்பு வழங்குவதென் றும் முடிவு செய்யப்பட் டது. பின்னர், புயல்-மழை யின் காரணமாக ஏற் பட்ட உயிரிழப்பு, கால் நடை இழப்பு போன்ற சேதங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டு; மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நடவடிக்கை களை முறையாகவும், வேகமாகவும் மேற் கொள்ளத் தேவையான அறிவுரைகளை வழங்கு வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment