வட கிழக்குப் பருவமழை பாதித்த மாவட்டங் களில், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது பற்றி தமிழக வருவாய் நிருவாக ஆணையர் ந.சுந்தரதேவன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழகத்தில் நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப் பாக, தென் மாவட்டங் களில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்து வரும் கனமழை காரண மாகப் பாதிக்கப்பட் டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கை கள் குறித்து முதலமைச் சர் கலைஞர் கடந்த 25 ஆம் தேதியன்று ஆய்வு செய்ததைத் தொடர்ந்து நேற்று (29.11.2010) மீண் டும் ஆய்வு செய்தார். அப்போது மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணி களை மேலும் விரைவு படுத்திட வேண்டு மென்றும், பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்கு உடனடியாக ஏற்பாடு கள் செய்திட வேண்டு மென்றும், நிவாரண உதவிகளைச் சற்றும் தாமதம் இல்லாமல் உரியவர்களுக்கு வழங் கிட ஆவன செய்திட வேண்டுமென்றும்; மழையின் காரணமாகப் பகுதியாகவும், முழுமை யாகவும் சேதமடைந்த 1,254 குடிசைகள் மற்றும் வீடுகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் 25 லட் சத்து 8 ஆயிரம் ரூபாயும், இறந்த 335 கால்நடை களுக்கு முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாயும், இம்மழை காரணமாக, உயிரிழந்த 103 பேரின் குடும்பங்களுக்கு உட னடி நிவாரண உதவியாக மாவட்ட ஆட்சியர் அள வில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல மைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து மேலும் ஒரு லட்ச ரூபாயும் ஆக 2 லட்சம் ரூபாய் வழங் கிட வேண்டுமென்றும் முதலமைச்சர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும், மழையி னால் மதுரை, விழுப் புரம், தருமபுரி, தஞ்சா வூர், ஈரோடு, திருச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரிய லூர், பெரம்பலூர் மற் றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏறத் தாழ ஒரு லட்சத்து 42 ஆயிரம் எக்டேர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், மழை நீர் முழுமையாக வடிந்த வுடன் பயிர்ச் சேதம் குறித்து கணக்கிடப் பட்டு, அரசின் நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கிட நடவடிக்கை கள் மேற்கொள்ளப் படும் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார். - இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Tuesday, November 30, 2010
மழை பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் : முதல்வர் கலைஞர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment