மத் திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் மண விழாவை முதல்வர் கலைஞர் முன்னிலையில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன் பழன் நடத்தி வைத்தார்.
தமிழக முதல்வர் கலை ஞர் அவர்களின் பெய ரன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - காந்தி ஆகியோரின் செல்வன் தயாநிதி அழகிரி - அனுஷா ஆகியோரது மணவிழாவை முதல்வர் கலைஞர் முன்னிலையில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழ கன் நடத்தி வைத்தார்.
மாநாடுபோல் மணவிழா
தமுக்கம் மைதானத் தில் 18.11.2010 அன்று காலை 9 மணிக்கு மிகச் சிறப்பாக மாநாடுபோல் நடை பெற்ற இம்மணவிழா வில் ஏராளமான அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்
மு.க.ஸ்டாலின் இம்மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரை யும் வரவேற்று தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேடையில் அமர்ந்தி ருந்த முக்கியப் பிரமுகர் களுக்கு மத்திய அமைச் சர் மு.க. அழகிரி, மு.க. தமிழரசு ஆகியோர் பொன்னாடை அணி வித்தனர். மத்திய மேநாள் அமைச்சர் டி.ஆர்.பாலு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மணமக்களுக்கு மாலை மாற்றிக் கொள் ளச் செய்து மண விழாவை நடத்தி வைத் தார் - தமிழக நிதியமைச் சர் பேராசிரியர் க.அன் பழகன். உரையாற்றியோர்: மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி எஸ்றா சற்குணம், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, காங்கிரஸ் கட் சியைச் சார்ந்த திருநா வுக்கரசர், சாலமன் பாப் பையா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய் தீன், பா.ஜ.க. இல.கணே சன், சபாநாயகர் ஆவு டையப்பன், தவத்திரு பொன்னம்பல அடிக ளார், கவிஞர் வைர முத்து, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பி னர் தொல். திருமா வளவன், காங்கிரஸ் கட் சித் தலைவர் கே.வி.தங்க பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், மத் திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரம், மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக தமிழக முதல் வர் கலைஞர் சிறப்புரை யாற்றினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன்சிங் ஆகியோ ரது ஆங்கில வாழ்த்துக் கடிதத்தை மத்திய அமைச் சர் தயாநிதி மாறன் வாசித்தார். மதியம் 11.45 மணிக்கு மணவிழா நிறைவு பெற் றது. கட்சி வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத் துப் பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பல் வேறு துறைகளைச் சார்ந் தவர்கள் இம்மணவிழா விற்கு வந்திருந்தனர்.
No comments:
Post a Comment