இந்திய உர நிறுவனங்களின் சங்க 46வது ஆண்டு கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் விழா மலரை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி வெளியிடுகிறார். இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பெற்று கொள்கிறார். அருகில் இந்திய உர நிறுவனங்களின் சங்க தலைவர் வெள்ளையன்.
உரங்கள் தட்டுப்பாடின்றி தரமாக கிடைக்க, தேசிய உரக் கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
உரங்கள் தட்டுப்பாடின்றி தரமாக கிடைக்க, தேசிய உரக் கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்திய உர நிறுவனங்க ளின் சங்க 46வது ஆண்டு கருத்தரங்கு டெல்லியில் நேற்று (29.11.2010) தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:
இந்தியாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 160 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நமக்கு முன் உள்ள மிகப் பெரிய சவால். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, உரக் கொள்கைகள் உட்பட எந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், பல்வேறு உரங்களுக்கும் மத்திய அரசு மானியங்கள் வழங்கி வருவதால், விலை உயர்வின் சுமை விவசாயிகளை பாதிக்காமல் பாதுகாக்கிறது. கடந்த காலங்களில் உரக் கொள்கை முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இல்லை. உரத் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சரியான கொள்கை தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உர மானியங்களை குறைக்கவும் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கொள்கையை கடந்த ஏப்ரல் முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய உரக் கொள்கையில் மேலும் மாற்றங்கள் செய்வது பற்றி அரசு பரிசீலிக்கிறது.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
No comments:
Post a Comment