முதல்வர் கருணாநிதியை பாமக தலைவர் ஜி.கே.மணி, சென்னை கோட்டையில் நேற்று (29.11.2010) சந்தித்து பேசினார். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் நிருபர்களிடம் ஜி.கே. மணி கூறியதாவது:
நீதிபதி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வன்னியர் மட்டும் நீதிபதியாக இருக்கிறார். எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு நீதிபதி நியமனத்தில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டோம். அது உச்சநீதிமன்றத்தில் உள்ள விவகாரம் என்று முதல்வர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என ராமதாஸ் கூறி வரு கிறார். அனைத்து சமுதாய தலைவர்களுடன் வந்து முதல்வரிடம் மனு கொடுத் தார். தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே மக்களின் சமூக, பொருளா தார, கல்வி நிலை அறிய தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். எங்கள் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். முதல்வருடனான எங்கள் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
No comments:
Post a Comment