சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவை முதலமைச்சர் கலைஞர் 24.11.2010 அன்று திறந்து வைத்தார். உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் உள்ளனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட நாள் முதலே பொதுமக்களும் அதைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா முதல்வர் கருணாநிதியால் கடந்த 24.11.2010 அன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. பூங்கா திறந்து வைக்கப்பட்ட முதல் நாள் சுமார் 1600க்கும் மேற்பட்ட பெரியவர்களும் மற்றும் குழந்தைகளும் இரவு 10 மணி வரை மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். தொடர்ந்து 25.11.2010 அன்றும் 2300க்கும் மேற்பட்ட பெரியவர்களும் மற்றும் குழந்தைகளும் செம்மொழிப் பூங்காவினை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாளிதழில், பொதுமக்கள் பார்வைக்கு செம்மொழி பூங்கா திறந்துவிடப்படும் தேதி தெரியாததால், 25.11.2010 அன்று பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்ற செய்தி வந்திருப்பது தவறானதாகும். மேலும் 25.11.2010 அன்று ஏராளமான பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் செம்மொழிப் பூங்காவிற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருப்பதும் உண்மையல்ல. குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தவறான செய்தி. இது மிகவும் வருத்ததத்திற்குரியதாகும்.
பூங்கா திறந்து வைக்கப்பட்ட நாளான்றும், மறுநாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்த்து வந்துகொண்டிருக்கின்ற நிலையில், பூங்காவை பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு மாறானது என, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்ககத்தின் சார்பில் அதன் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment