கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 14, 2010

காவலர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் - முதலமைச்சர் கலைஞர்


காவலர்களின் எண்ணிக்கை வெகுவிரைவில் அதிகரிக்கப்படும். அவர் களுக்கு வேண்டிய வசதிகளும் சீர்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் இன்று சட்ட மன்றத்தில் அறிவித்தார். 10.11.2010 அன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள் விக்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பதில் வருமாறு:

காவலர்களுக்கு அடுக்குமாடி

எம். அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பழனி தொகுதி, பழனி நகரில் காவலர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?

முதலமைச்சர்: பேர வைத் தலைவர் அவர் களே, 2008-2009 ஆம் ஆண்டில் பழனி நகரில் பணிபுரியும் காவலர் களுக்கு 32 புதிய குடியி ருப்புகள் கட்டுவதற்கு அரசாணை 18-11-2008 இல் வெளியிடப்பட் டுள்ளது. இதன் கட்டு மானப் பணி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எம். அன்பழகன்: பேரவைத் தலைவர் அவர் களே, பழனி தொகுதிக்குக் கடந்த நான்கரை ஆண்டுகளில் பழனி நகரக் காவல் நிலையத்தை முதல் தரக் காவல் நிலையமாகத் தரமுயர்த்தி, புதிய கட்டட மாகக் கட்ட ரூ.35 லட் சம் வழங்கி, தற்போது பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்படும் நிலையி லுள்ளது. தாலுகா காவல் நிலையத்திற்குப் புதிய கட்டடம் கட்ட, ரூ.42 லட்சம் அனுமதி வழங்கி கட்டடப் பணிகள் நடை பெற்று வருகிறது. சாமி நாதபுரம் காவல் நிலை யத்திற்கும் புதிய கட்ட டம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழனி நகரத்தில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வீடுகளாக இருந்த காவலர் குடியிருப்புகளை இடித்து - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்போது அடுக்குமாடிக் கட்ட டம் கட்ட அனுமதி வழங்கியிருக்கிறார்கள்; அந்தப் பணிகள் நடை பெற்று வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் - முத் தமிழறிஞர், என் பாசத்திற்குரிய தலைவர் அவர் களுக்கு எனது சார்பிலும், எனது தொகுதி மக்களின் சார்பிலும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவலர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கிவிட் டதாகச் சொன்னார்கள். அப்பணி எப்போது முடி வடையும்?

முதலமைச்சர்: அந்தப் பணி நான்கு பிரிவு களாகப் பிரிக்கப் பட்டு நடைபெற்று வருகிறது. இவற்றில் இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை கற்காரை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. மீதமுள்ள இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுமானப் பணிகள் வருகிற மார்ச் 2011 இல் முடிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. எம். அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவலர்கள் வாழ்வில் மூன்று போலீஸ் கமிஷன்களை அமைத்து ஒளியேற்றியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இந்நிலையில் காவலர்கள் மத்தியில் சிறிய மனத்தாங்கல் இருக் கிறது. அதையும் கனிவுடன் பரிசீலித்து களைய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அதா வது, காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்பு களின் பரப் பளவு போதுமானதாக இல்லை என்ற குறை இருக்கிறது. அதைக் களைய அரசு ஆவன செய்யுமா? பழனி நகரத்தில் 32 காவலர் குடியிருப் புகள் மட்டுமே கட்டப்படுகின்றன. பழனி நகரத் தைச் சுற்றி 9 காவல் நிலையங்கள் உள்ளன. அவற் றில் 9 ஆய்வாளர்கள், 20 துணை ஆய்வாளர்கள், 200 காவலர்கள் உள்ளனர். எனவே, காவலர்களுக்கு பழனியில் மேலும் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் அமைத்துத் தர முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

எத்தனை குடியிருப்புகள்?

மு. அப்பாவு: பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாகப் பொறுப்பேற்று, சிறப்பாக ஆட்சி செய்து வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை காவலர்களுக்காக எத்தனை குடியிருப்புகள் அனுமதிக்கப்பட்டிருக் கின்றன என்பதைத் தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலமைச்சர்: தமிழகத்தில் இருக்கின்ற மொத்தம் உள்ள காவல் பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 783 ஆகும். தற்பொழுது மொத்தம் 45 ஆயிரத்து 847 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, அந்தப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் காவல் நிலையத்தின் நிலை

ஜி.கே. மணி: பேரவைத் தலைவர் அவர்களே, சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர் நகரில் காவலர்களுக்குக் குடியிருப்பு இல்லை என்ற கோரிக்கை இருக்கிறது. மேட்டூர் காவல் நிலையம் பழைமையான காவல் நிலையம் - ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஓட்டுக் கட்டடமாகும். அது குறுகிய இடத்தில் இயங்கி வருகின்றது. இதுகுறித்து நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசியபோது, முதல்வர் அவர்கள் அங்கே காவல் நிலையம் புதிதாகக் கட்டப்படும் என்று அறிவித் தார்கள். அது இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, நடப்பாண்டில் மேட்டூர் வட்டக் காவல் நிலையம் கட்டப்படுமா? மேட்டூர் அணைதான் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் கொடுக்கிற, தஞ்சைத் தரணியை உருவாக்குகிற உயிர்நாடி அணையாக இருக்கிறது. அதற்கு நிரந்தரமாகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப் படையில், காவலர்கள் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆகவே, ஒரு அணி (க்ஷயவவயடடி) மேட்டூர் அணையின் பாது காப்பிற்காக ஒதுக்கப்படுமா?

முதலமைச்சர்: தலைவர் அவர்களே, மேட்டூர் அணையைப் பாதுகாப்பது என்பது காவலர்களால் மாத்திரம் முடிகின்ற காரியமல்ல; அதற்குரிய விதிமுறைகள், சட்டங்கள், அணுகுமுறைகள் - இவை அனைத்தும் சேர்ந்துதான் மேட்டூர் அணையானாலும் அல்லது எந்த அணையானாலும் - அவற்றைப் பாதுகாக்க முடியும். மேட்டூர் அணைப் பகுதியிலே எந்தவிதமான கலவரமும் கிடையாது. ஆகவே, அங்கே காவலர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அணையைப் பாதுகாக்க - அணை யினுடைய பயன்பாட்டை யாரும் பாழ்படுத்தி விடாமல் தடுத்து நிறுத்த காவலர்கள் தேவையே தவிர, மேட்டூர் அணையைப் பாதுகாப்பதற்கு காவ லர்களால் முடியாது. நாட்டை ஆளுகின்ற வர்களால்தான் முடியும் - நம்மால் முடியும்.

போதுமான காவலர்கள் இல்லை

வை. சிவபுண்ணியம்: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகத்தில் எத்தனை காவலர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொன்னார்கள். தமிழகத்தில் மேலும் கூடுதலாகக் காவலர்கள் தேவைப்படுவதாக நான் அறிகிறேன். பல காவல் நிலையங்களிலே போதுமான காவலர்கள் இருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குப் பணிச்சுமை ஏற்படு கிறது. ஆகவே, கூடுதலாகக் காவலர்களைத் தேர்வு செய்வதற்கும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்வதற்கும் அரசிடம் உத்தேசம் இருக்கிறதா? அதைப்போலவே, அந்தக் காவலர்கள் பணியில் ஈடுபடுகிறபோது, அவர்களின் மனதுக்குத் தேவை யான புத்தாக்கப் பயிற்சி தேவைப்படுகிறது. அவர் களுக்கு விடுமுறை என்பதே இல்லாத நிலை இருக்கிறது. ஆகவே, வாரம் ஒரு நாள் அல்லது அரை நாளாவது அவர்களுக்கு விடுமுறை விடுவதன் மூலமாக - அவர்களின் மனநிலையைச் சரிசெய்து கொள்வதற்கு - அவர்களின் குடும்பத்தோடு பொழு தைக் கழிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களின் மன நிலையில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, அதன்மூலமாக நாட்டிற்கு நற்பலனை ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த முயற்சியைச் செய்வதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா?

முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, காவலர்களை எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் `தாக்கிப் பேசுவார்களோ; அந்தளவிற்கு இன்றைக்குத் `தாக்கிப் பேசியிருக்கின்றார்கள். (சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி). அவர்களு டைய வசதி, வாய்ப்பு, எண்ணிக்கைப் பெருக்கம் - இவற்றைப் பற்றியெல்லாம் அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. வெகு விரைவிலே காவலர் களுடைய எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு - அந்தக் காவலர்களுக்கான வசதிகள் சீர்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment