மகன் திருமண வரவேற்பில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பாட்டுப்பாடி விருந்தினர்களை அசத்தினார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி& அனுஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது. அதில் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மணமக்களை வாழ்த்த வந்த நடிகர் வடிவேலுவை மேடைக்கு அழைத்து கங்கைஅமரன் பாட வைத்தார். வடிவேலு ‘ஆடி வா...பாடி வா’ மற்றும் ‘எட்டணா இருந்தா‘ ஆகிய பாடல்களை பாடி அசத்தினார். மு.க.முத்து மகன் அறிவு நிதியும் மேடையில் பாடினார்.
ஒருகட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மேடைக்கு அழைத்த கங்கை அமரன் அவரையும் பாடும்படி வேண்டுகோள் விடுத்தார். சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தில் இடம் பெற்ற ‘பெண் ஒன்று கண்டேன்‘ என்ற பாடலை மு.க.அழகிரி பாடினார். இதனை தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட குடும்பத்தினரும் விருந்தினர்களும் மணமக்களும் ரசித்து கேட்டனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி& அனுஷா ஆகியோருக்கு மதுரையில் 17.11.2010 அன்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் கருணாநிதி பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை ஐகோர்ட் வக்கீல் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் மதுரை தமுக்கம் மைதானத்தில் 18.11.2010 அன்று காலை நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் திருமணம் நடக்கிறது. 17.11.2010 அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக கவர்னர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பிரபுல்படேல், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமசந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், சன் குழும தலைவர் கலாநிதி மாறன், தொழிலதிபர்கள் எம்.ஏ.எம்.ராமசாமி, ஏ.சி. முத்தையா, பிஆர் பழனிச்சாமி, சீனிவாசன், வேணு சீனிவாசன், கருமுத்துகண்ணன், நல்லி குப்புசாமி, தினேஷ், கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த், மதுரை ஆதினம், புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன், காங்கிரஸ் எம்பிக்கள் சித்தன், ஞானதேசிகன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், பிரபு, மாதவன், சூரியா, கார்த்தி, வடிவேல், விவேக், ஸ்ரீகாந்த் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேஷ், தியாகு, வாகை சந்திரசேகர், ஏ.எல்.ராகவன், எம். என்.ராஜம்,சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணனன், பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் டிஜிபி லத்திகாசரன் உட்பட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி, முரசொலி செல்வம், செல்வி செல்வம், மு.க. முத்து, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி, கயல்விழி வெங்கடேஷ், அஞ்சுகசெல்வி, விவேக், உதயநிதி ஸ்டாலின், அறிவுநிதி, சீதாராமன் குடும்பத்தினர், திமுக மாவட்ட செயலாளர்கள் வரவேற்றனர்.
No comments:
Post a Comment