தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக, தமிழக வனத்துறைக்கு இந்திரா பிரியதர்சினி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை::
தமிழக வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவு, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, 28 மாவட்டங்களில் மரம் வளர்ப்போர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் மரம் வளர்ப்பது பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதுடன், தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்குவது போன்ற பணிகளை செய்து வருவதுடன், தமிழகத்தில் பசுமைப் போர்வை பகுதி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 2010ம் ஆண்டுக்கான இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ரா விருது தமிழக வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருதை, தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ், முதல்வர் கருணாநிதியிடம் நேற்று (25.11.2010) காட்டினார்.
No comments:
Post a Comment