கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

ஆ.ராசா ராஜினாமா செய்தது ஏன்? - முதல்வர் கருணாநிதி விளக்கம்


மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. கொள்கை பரப்புப் செயலாளரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிகளில் ஒருவராக விளங்கி வருபவரும், பெரம்பலூர் பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான ஆ. ராசா, தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய கட்சிக்கும் என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராகவும், பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து தலித் இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர்.
அவரை மத்திய அமைச்சர் பதவில் இருந்து விலக்க வேண்டுமென்ற திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்றது. ஜனநாயக கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிடவும், நாட்டு மக்களுடைய பிரச்னைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவுக்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால், 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொலைத் தொடர்புத் துறை 2&ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையை கையாண்டு அளித்து வந்ததோ, அதே முறையைத்தான் ராசா பின்பற்றினார் என அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் ராஜினாமா செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் செய்து நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.
எல்லோராலும் நடத்தப்படும் குழப்பம் அல்ல, குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை. சிலரே போதும். அந்த சிலரால் இன்று இந்தியாவில் ஐ.மு. கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த ஜனநாயக நெறியிலேதான் நம்மை எல்லாம் வளர்த்து இருக்கிறார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்தில் இருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
அதை நிலைநாட்டிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்றிரவே தனது அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் ராசா வழங்குவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment